10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்: மே 27-இல் வெளியாகும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2019

10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்: மே 27-இல் வெளியாகும்!


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1,  பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மறுமதிப்பீடு, மறுகூட்டல் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு வரும் திங்கள்கிழமை அதற்கானமுடிவுகள் வெளியாகின்றன.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் வரும் திங்கள்கிழமை வெளியிடப்படும்.

 தேர்வர்கள் ள்ஸ்ரீஹய்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்துக்குச் சென்று மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மதிப்பெண் மாற்றங்களுடன் திங்கள்கிழமை பிற்பகல் முதல் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம்மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண்மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இந்தப் பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது.பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு...: இதேபோன்று கடந்த மார்ச் மாதம் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதி அதில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் ள்ஸ்ரீஹய்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் வரும் திங்கள்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.

மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் அன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி