தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள், சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் 10 நாள் இலவச கல்விச்சுற்றுலா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2019

தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள், சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் 10 நாள் இலவச கல்விச்சுற்றுலா


கலை, இலக்கியம், அறிவியலில் சிறந்து விளங்கும் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள், சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் 10 நாள் இலவச கல்விச்சுற்றுலா மேற்கொள்கின்றனர்.தமிழக அரசுபள்ளி மாணவர்களை வெளிநாடுகளில் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றுள்ளது.

பள்ளிக்கல்வியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அதில் ஒன்று தான் வெளிநாடு கல்விச் சுற்றுலா. கலை, அறிவியல், இலக்கியத்தில் சிறந்து விளங்கும் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்து அவர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்வது தான் இத்திட்டத்தின் நோக்கம்.மாநில அளவில் இதற்காக நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் வெளிநாடு கல்விச் சுற்றுலா செல்ல முடியும்.அதன் படி தற்போது 25 மாணவர்கள்சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.5 நாள் சிங்கப்பூரிலும், 5 நாள் மலேசியாவிலும் அவர்கள் தங்கிதொழிற்சாலைகள், அருங்காட்சியகங்கள், பல்கலைக்கழகங்களைப் பார்வையிடுவதுடன், கல்வி நடைமுறைகளையும் அறிய உள்ளனர்.அந்த மாணவர்களுடன் இரு ஆசிரியர்களும் பயணிக்கின்றனர்.

வெளிநாடு செல்வதை எண்ணி மாணவ மாணவியர் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.அரசுப்பள்ளியில் படிக்கும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தாங்கள் வெளிநாடு செல்வது பெருமை கொள்ளச் செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. பள்ளியின் முகவரி, மாணவர்களின்பெயர் விவரம் அறிவிக்காதது ஏன்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி