இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில்25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை 3 ஆயிரம் பள்ளிகளில் பட்டியல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2019

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில்25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை 3 ஆயிரம் பள்ளிகளில் பட்டியல் வெளியீடு


இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.

அதன்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் படிக்க மாணவர்களின் பெற்றோர் விண்ணப்பித்து இருந்தனர். இடஒதுக்கீட்டை விட குறைவான விண்ணப்பங்கள் வந்திருந்த 3,000 பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதேபோல், இடஒதுக்கீட்டை விட அதிக விண்ணப்பங்கள் வந்திருந்த பள்ளிகளில் மாணவர்களின் பட்டியலை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு மாற்று ஏற்பாடாக வருகிற 6-ந்தேதி குலுக்கல்முறையில் மாணவர் சேர்க்கை இறுதி செய்யப்பட இருக்கிறது. டி.ஜி.இ. எனப்படும் சிறப்புப்பிரிவினருக்கான இறுதி பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட இருக்கிறது. www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் சிறப்பு பிரிவினருக்கான தேர்வுப்பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் வெளியிடுவார்கள்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி