புதுச்சேரியில் கிராம அரசு பள்ளியில் இருந்து 3 மாணவிகள் ஐஎஸ்ஆர்ஓ ( ISRO ) இளம் விஞ்ஞானி பயிற்சிக்குதேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2019

புதுச்சேரியில் கிராம அரசு பள்ளியில் இருந்து 3 மாணவிகள் ஐஎஸ்ஆர்ஓ ( ISRO ) இளம் விஞ்ஞானி பயிற்சிக்குதேர்வு


புதுச்சேரியில் கிராமப் பகுதியிலுள்ள அரசு பள்ளி மாணவிகள் மூவர் ஐஎஸ்ஆர்ஓ விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு தேர்வாகியுள்ளனர்.

புதுச்சேரி கிராமப் பகுதியான ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேநிலைப்பள்ளி மாணவிகளான மோனிகா, பவித்ரா, கவிபாரதி ஆகிய மூவர் ஐஎஸ்ஆர்ஓ விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு செல்லும் இவர்கள் மூவரும் கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வரும் 12ம் தேதி முதல் 25ம் தேதி வரை பயிற்சி எடுக்கின்றனர். இவர்களுடன் வழிகாட்டி அறிவியல் ஆசிரியர் சுப்பிரமணியன், உடற்கல்வி ஆசிரியர் பிரகாஷ் ஆகியோர் உடன் செல்கின்றனர். பள்ளி துணை முதல்வர் மேகலா மற்றும் குழந்தைகள் கல்வித்துறைக்கு நேற்று வந்து கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு, இணை இயக்குநர் குப்புசாமி ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.

கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு புதுச்சேரி முழுக்க ஏராளமானோர் விண்ணப்பித்தனர். அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் என இறுதி கட்டமாக 46 பேர் பட்டியல் தயாரானது. திறன் சார்ந்த அடிப்படையில் தயாரான இறுதி பட்டியலை ஐஎஸ்ஆர்ஓ அனுப்பினோம். தகுதி அடிப்படையிலும், கிராமப் பகுதியில் இருந்துஇறுதி கட்டம் வரை முன்னேறி வந்தோர் அடிப்படையில் ஏம்பலம் அரசு பள்ளி மாணவிகள் 3 பேரை ஐஎஸ்ஆர்ஓ தேர்வு செய்துள்ளனர்.

குறிப்பாக கிராமப்பகுதிக்கு முன்னுரிமை தந்து தேர்ந்தெடுத்துள்ளனர், திருவனந்தபுரத்தில் ஐஎஸ்ஆர்ஓ விக்ரம்சாராபாய் விண்வெளி மையத்தில் பயிற்சி பெற உள்ளனர். இதற்கான சான்று கடிதங்களும் வந்துள்ளன" என்று குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி