நிரம்பி வழியும் கேரள அரசுப் பள்ளிகள் - மூன்றே நாட்களில் 30 ஆயிரம் குட்டீஸ் - கேரள அரசு அசத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2019

நிரம்பி வழியும் கேரள அரசுப் பள்ளிகள் - மூன்றே நாட்களில் 30 ஆயிரம் குட்டீஸ் - கேரள அரசு அசத்தல்


4-14 வயது வரை கட்டாய இலவசக்கல்வி என்பதை அர்த்த முள்ளதாக்கியிருக்கிறது கேரள அரசு. மூன்றே நாட்களில் 30 ஆயிரம் குழந்தைகள் முதல் வகுப்பில் படிக்க அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு 2 லட்சத்து 71 ஆயிரத்து 813குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.இது முந்தைய ஆண்டைவிட 15ஆயிரம் அதிகமாகும்.

தொடக்க கல்விவகுப்பறைகள் இந்த ஆண்டு ஹைடெக்காகமாற உள்ள நிலையில் நடப்பு ஆண்டு 3 லட்சத்துக்கும் கூடுதலாக உயர வாய்ப்புள்ளது. கேரள அரசு கடந்த 2 ஆண்டுகளில் உயர்நிலை வகுப்பறைகளை ஹைடெக்காக மாற்றியதை தொடர்ந்து அவை மாணவர்களால் நிரம்பி வழிகின்றன.கடந்த ஆண்டு 45 ஆயிரம் வகுப்பறைகள் ஹைடெக்காக மாற்றப்பட்டுள்ளன.

 தனியார் பள்ளிகளிலிருந்து தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க அதிக அளவில் பெற்றோர் ஆர்வம்காட்டி வருகின்றனர். அதன் விளைவாக 2017-18 இல் ஒன்றரை லட்சம் மாணவர்களும், 2018-19இல் 1.8 லட்சம் மாணவர்களும் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்களை மாற்றுச் சான்று இல்லாமலே அரசுப்பள்ளிகளில் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

10 comments:

  1. சிறந்த அரசின் வளர்ச்சி மேலும் வளரட்டும்

    ReplyDelete
  2. நம் அரசு மெட்ரிக் பள்ளிகளுக்கு மாணவர்களை சேர்க்கும் பணியை செய்கிறது.

    ReplyDelete
  3. கேரளா அரசுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்....

    ReplyDelete
  4. Kerala government komiyam vangi kudinga Tamilnadu government

    ReplyDelete
  5. சிறந்த தலைவரை தேர்வு செய்தவர்களுக்கு கிடைத்த பலன் தான் இது..

    ReplyDelete
  6. சிறந்த தலைவரை தேர்வு செய்தவர்களுக்கு கிடைத்த பலன் தான் இது..

    ReplyDelete
  7. சிறந்த தலைவரை தேர்வு செய்தவர்களுக்கு கிடைத்த பலன் தான் இது.. தமிழ் நாட்டவர் இதனைப் பற்றி பெருமை பட அருகதை இல்லை..

    ReplyDelete
  8. ஆசிரியர்களும்தான்

    ReplyDelete
  9. இங்கே சாதாரண முட்டாள்கள் மாண்பு மிகு ஆனால் என்ன முன்னேற்றம் இருக்கும்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி