இந்த மாத இறுதியில் 760 பள்ளிகள் மூடப்படுகின்றன!! அதிகப்படியான பள்ளிகள் எந்த மாவட்டத்தில் தெரியுமா?? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2019

இந்த மாத இறுதியில் 760 பள்ளிகள் மூடப்படுகின்றன!! அதிகப்படியான பள்ளிகள் எந்த மாவட்டத்தில் தெரியுமா??


மே மாத இறுதிக்குள் தமிழக அரசு அங்கீகாரம் பெறத் தவறும் 760 பள்ளிகள் மூடப்பட உள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பள்ளிகள் தமிழக அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும். பள்ளிகளுக்குத் தேவையான நிலம், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை சரியாக இருந்தால்மட்டுமே அனுமதி வழங்கப்படும்.இதற்காக பள்ளிக்கல்வி ‌இயக்குநரகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், அனைத்து த‌னியார் பள்ளிகளும் ‌இந்த மாதம் மே 20 முதல் 22க்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் தமிழக அரசின் அங்கீகாரத்தை பெற தவறும் 760 பள்ளிகள் மூடும் சூநிலை உருவாகியுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

மேலும், அங்கீகரிக்கப்படாத சில பள்ளிகள் சிபிஎஸ்இ பாடதிட்டத்திற்கு மாறுவதற்கான முயற்சிகள் செய்துவருவதாகவும் கூறப்படுகிறது. மூடப்படும் வாய்ப்புள்ள 760 பள்ளிகளில் அதிகபட்சமாக 86 பள்ளிகள் திருப்பூரில் இயங்கி வருவதாகவும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 55 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் உள்ளன எனவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி