பள்ளி திறக்கும் நாளில் பணியில் சேர உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2019

பள்ளி திறக்கும் நாளில் பணியில் சேர உத்தரவு


தமிழகத்தில், கடந்த டிசம்பரில், நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில், 2,381 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில், துவக்க பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், இம்மையங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து, சில ஆசிரியர்கள், உயர் நீதிமன்றத்துக்கு சென்றதால், எல்.கே.ஜி., வகுப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.

கடந்த, 22ம் தேதி அளித்த தீர்ப்பில், 'இடைநிலை ஆசிரியர்களை, எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு நியமித்ததில் தவறில்லை' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், பள்ளி திறக்கும் நாளன்று, அங்கன்வாடி மையங்களில்,பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி