பொறியியல் பட்டம் முடிக்காதவர்களுக்கு அரியர் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2019

பொறியியல் பட்டம் முடிக்காதவர்களுக்கு அரியர் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


பழைய மாணவர்களுக்கு அரியர் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு வழங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் உயர்கல்வித் துறை செயலர் மங்கத்ராம் சர்மா, துணைவேந்தர் சுரப்பா, பதிவாளர் குமார் உட்படமுக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கல்விக் கட்டண உயர்வு, அரியர் தேர்வு முறை, புதிய பதிவாளர் நியமனம், நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பதிவாளர் குமார் கூறிதயாவது:

பொறியியல் படிப்புகளில் ஓரிரு பாடங்கள் அரியர் இருப்பதால் பட்டத்தை முடிக்க முடியாமல் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சிரமத்தில் உள்ளனர். எனவே, அரியர் வைத்துள்ள மாணவர்கள் நலன் கருதி மீண்டும் தேர்வெழுத அவர்களுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி வரும் நவம்பர், டிசம்பர் பருவத்தேர்வில் சிறப்புக் கட்டணம் செலுத்தி இதுவரை பட்டம் முடிக்காத பழைய மாணவர்கள் தேர்வு எழுதலாம் என ஆட்சி மன்றக் குழுவில் முடிவு செய்யப்பட்டது.

கட்டணம் உயர்வு

வளரும் தொழில்நுட்ப தேவைக்கேற்ப இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டங்களில் வரும் கல்வியாண்டு முதல் சிறிய அளவிலான மாற்றம் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும், உறுப்புக் கல்லூரிகளில் இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தமிழகஅரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

அரசு ஒப்புதல் வழங்கியதும் இந்த ஆண்டு முதலே கட்டண உயர்வுஅமலுக்கு வரும்.மாணவர்கள் 8-வது பருவத்தில் ஓரிரு பாடங்களில் அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கு உடனடி சிறப்புத் தேர்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி