உண்மைத்தன்மை இல்லை என்று காரணம் கூறி தேர்வுநிலை , சிறப்பு நிலை அனுமதிப்பதில்காலதாமதம் கூடாது : பள்ளிக் கல்விச் செயலர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2019

உண்மைத்தன்மை இல்லை என்று காரணம் கூறி தேர்வுநிலை , சிறப்பு நிலை அனுமதிப்பதில்காலதாமதம் கூடாது : பள்ளிக் கல்விச் செயலர் உத்தரவு


பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று 10 நாட்களுக்குள் அனைத்து தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை அனுமதித்து ஆணை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க கல்விச் செயலர் உத்தரவு.

அப்போது இயக்குநர் அவர்கள், பள்ளிக் கல்வித்துறைசெயலாளர் அவர்கள் தலைமையில்  தலைமை செயலகத்தில் 27.5.19 நடைபெற்ற இயக்குநர்கள் கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை கோரும் கருத்துருக்கள்  கல்வி சான்றிதழ் உண்மை தன்மை அறிந்தபின்தான் அனுமதி என  நிலுவையில் வைக்க வேண்டாம் என்றும் 10 நாட்களில் அனுமதித்து ஆணை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும், இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் 10ஆண்டு / 20ஆண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை/சிறப்புநிலை வழங்கி பணப்பயன்கள் 10 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும்  கட்செவியில் குரல்வழிச் செய்தியாக அனுப்பியுள்ளார். எனவே விரைவில் ஆசிரியர்களுக்கு உரிய ஆணைகள் கிடைக்குமென நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி