CBSE - 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்பது உண்மையில்லை, இன்று வெளியாகாது; சி.பி.எஸ்.இ செய்தி தொடர்பாளர் ராமா சர்மா அறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2019

CBSE - 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்பது உண்மையில்லை, இன்று வெளியாகாது; சி.பி.எஸ்.இ செய்தி தொடர்பாளர் ராமா சர்மா அறிக்கை


10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளதாக வந்த செய்திக்கு சி.பி.எஸ்.இ மறுப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 2-ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. அதில் 27 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.. www.cbseresults.nic.in மற்றும் cbse.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம். சிபிஎஸ்இ இணையதளங்களின் முகப்பு பக்கத்தில் ‘‘பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு 2019’’ என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

அதைத்தொடர்ந்து மாணவர்களின் பதிவு எண், பள்ளி ரோல் நம்பர், ஹால்டிக்கட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை பதிவேற்றம் செய்து சப்மிட் பட்டனை அழுத்த வேண்டும். அதைத்தொடர்ந்து மாணவரின் தேர்வு முடிவு  திரையில் தோன்றும். அதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். சிபிஎஸ்இ பிளஸ்2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 3-ம் வாரத்தில் வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டிருந்தது. ஆனால் சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வுகள் முன்கூட்டியே மே 2-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் சி.பி.எஸ்.இ செய்தி தொடர்பாளர் ராமா சர்மா வெளியிட்ட அறிக்கையில், சி.பி.எஸ்.இ 10--ம் வகுப்பு பொதுச்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்பது உண்மையில்லை, இன்று வெளியாகாது; சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். பொதுச்தேர்வு முடிவுகள் தேதி குறித்து சி.பி.எஸ்.இ விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி