EMIS பணியை BRTE - களிடம் ஒப்படைக்க ஆசிரியர்கள் கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2019

EMIS பணியை BRTE - களிடம் ஒப்படைக்க ஆசிரியர்கள் கோரிக்கை!


90% தொடக்கப் பள்ளிகளில் கணினி, இணைய வசதி இல்லை.50% க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் எமிஸ் சார்ந்த ஆன்லைன் பணிகளை பிறர் உதவி அல்லது இணைய தள மையம் மூலம் தகவல்களை உள்ளீடு செய்கின்றனர். இதனால் தவறு நிகழ்கிறது.

சில நேரங்களில் உயர் அலுவலர்கள் உரிய நேரம் தராமல் அவசரப் படுத்துகின்றனர். ஆகவே இன்றைக்கு எமிஸ் பணியை யார் மூலமோ, ஏதோ முடித்தோம் என்ற மனநிலை சில தலைமை ஆசிரியர்களிடம் உள்ளது.

BRTE க்கள் பள்ளி வேலை நாட்க ளில் பள்ளிக்கு வந்து, பள்ளி சார்ந்த, ஆசிரியர்கள் சார்ந்த, மற்றும் மாணவர்கள் சார்ந்த விவரங்களை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பெற்று, உரிய ஆவணங்களை அல்லது பதிவேடுகளை சரி பார்த்து, பள்ளியிலேயே ஆன்லைனில் பதிவு செய்வதன் மூலம், எமிஸ் பணிகளை மிகத் துல்லியமாக, 100% சரியாக முடிக்க முடியும்.

ஜுன் மாதம் முழுக்க பள்ளிப் பார்வையை தவிர்த்து எமிஸ் பணிகளை மட்டும் செய்தாலே 100% சரியாக செய்ய முடியும்.ஒரு BRTE க்கு சராசரியாக 10 பள்ளிகள் மட்டுமேஇருப்பதால், அவர்களுக்கும் கூடுதல் பணிச்சுமை இராது. இதனால் கற்றல்- கற்பித்தல் செயல்பாடுகளில், யாருக்கும் எந்த பாதகமும் வராது.தலைமை ஆசிரியர்களுக்கு பணிச் சுமையோ, தேவையற்ற அலைச்சல்களோ, கூடுதல் செலவினங்களோ ஏற்படாது.

பள்ளிக்கல்வித் துறை இந்த ஆலோசனையை ஏற்குமா?

2 comments:

  1. அப்படியே, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு முன் ஒவ்வொரு மாதமும் ஆசிரியர் பயிற்றுநர்களின் ஒப்பம் இருந்தால் மட்டுமே வழங்க வேண்டும் என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  2. எவ்வித கோரிக்கைகளை வைப்பது என்பதை பற்றி கூட புரிதலற்ற ஆசிரியர்களின் மனப்போக்கு

    தம்முடைய பள்ளியின் விவரங்களை தனக்கு ஒதுக்கப்பட்ட கடவுச்சொல்லை கொண்டு பதிவேற்றம் செய்து அதில் உள்ள விவரங்களை பராமரிப்பதும் மிக முக்கிய சான்றுகளை இதன்மூலமவழங்குவதும் ஒரு தலைமை ஆசிரியரின் தனிப்பட்ட ரகசியம் காக்கும் உரிமை என்பதை கூட மறந்து மற்றவர் இப் பணியை செய்து முடிக்க நினைக்கும் மனப்போக்கும் சாதாரண கணினி செயல்பாடுகளை கூட அறிந்துகொள்ள இயலாத மிக அவல நிலையும் இம்மாதிரியான மனப்போக்குகளை மாற்றாமல் அரசிடமோ பொதுமக்களிடமோ ஆசிரியர்கள் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்த இயலாது என்பதை உணர்வார்களா இம்மாதிரியான கோரிக்கை வைக்கும் ஆசிரியர்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி