Flash News : TET தேர்வு காரணமாக ஜூன் 8 அன்று நடக்க இருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2019

Flash News : TET தேர்வு காரணமாக ஜூன் 8 அன்று நடக்க இருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு


ஜூன் 8-ம் தேதி நடைபெற இருந்த பி.எட் தேர்வு ஜூன் 13-ம் தேதி பிற்பகல் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.  இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர்களாக பணியாற்ற டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1-5ம் வகுப்பு வரையும் 2ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6-8ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த முடியும்.

ஜூன் 8-ஆம் தேதி முதல் தாளும், ஜூன் 9-ஆம் தேதி 2-ஆம் தாளும் நடைபெறும் என்றும், தேர்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிஎட் படித்து கொண்டிருக்கும் மாணவர்களும் முதல் தாள் எழுதலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாள் நடைபெறும் அதே நாளில் பிஎட் தேர்வும் நடைபெற இருந்தது. இதனால் மாணவர்கள் குழப்பத்தில் இருந்தனர்.  இந்நிலையில் ஜூன் 8-ம் தேதி நடைபெற இருந்த பி.எட் தேர்வு ஜூன் 13-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. 

7 comments:

  1. Mental mathiri entha exam ha thalli vechirukan lusu paiyen. .. Yeppadi prepare panna mudiyum tet exam ku.. Exam vekarathula ivalo aarvam katturavam posting avalo sikiram podurana nu pakuren...

    ReplyDelete
  2. Posting poda solli sollunga highcourt

    ReplyDelete
  3. Athai arvam engalukum irruthathu 2017la.ana posting potala thirsty passage.

    ReplyDelete
  4. Y Tet date postpone pannalamea

    ReplyDelete
  5. NET NTA NEW SYLABUS FULL NOTES AVAILABLE FOR ENGLISH CONTACT ME 8489243942

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி