Flash News : பொதுத் தேர்வுகளில் மீண்டும் மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2019

Flash News : பொதுத் தேர்வுகளில் மீண்டும் மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!


* 10 ஆம் வகுப்பு இனி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஒரே தாள் தான்.

* 11 & 12 ஆம் வகுப்புகளுக்கு 5 பாடங்கள் மட்டும் போதுமானது.

* பள்ளி கல்வித் துறை - தமிழக  அரசுக்கு பரிந்துரை.

12 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு தற்போது தேர்வு நடந்து வரும்நிலையில், அடுத்தாண்டு முதல் அதனை 500 ஆக குறைக்க பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.12 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

 கடந்தாண்டு மற்றும் இந்தாண்டு தேர்வுகள் 600 மதிப்பெண்களில் நடந்தது.இந்நிலையில், தற்போது 600 மதிப்பெண்ணை 500 ஆக குறைக்க பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.மேலும், 12 மற்றும் 11-ம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்தால் போதும்.10-ம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 1 மற்றும் 2-ம் தாள் நீக்கப்பட்டு, ஒரே பாடமாக தேர்வு நடத்தப்பட உள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் இந்த பரிந்துரை பள்ளிக்கல்வியில் இருந்து தமிழை அகற்றும் முயற்சி என்று தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

17 comments:

  1. 11 மற்றும் 12 வகுப்பிற்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தாள் கட்டாயமாக்க வேண்டும்

    ReplyDelete
  2. Super decision.Language is necessary to read and write. Children wanted to excel in any language they can learn in college.

    ReplyDelete
  3. ஏற்கனவே இலக்கணத்தில் நாம் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறோம். இனி தமிழ் 1 தாள் வைத்தால்.. ஊ..ஊ..

    ReplyDelete
  4. People will start opting only English . Totally Tamil will be wiped out from our state. Very worst pallikalvi

    ReplyDelete
  5. People will start opting only English . Totally Tamil will be wiped out from our state. Very worst pallikalvi

    ReplyDelete
  6. பாழ்நிலத்தில் வீழ்ந்த அமிழ்துபோல் இவர்கள் கையில் தமிழ் சிக்கியுள்ளது.

    ReplyDelete
  7. 11th 12 newsku kalvithurai maruppu therivichitanga and 10th previous year methoddhan paper 1 & paper 2 nu solitanga

    ReplyDelete
  8. Ini pg engEngl teacher job illai. Bcoz most of govt school students prefer Tamil.

    ReplyDelete
  9. Ini pg teacher job illai. Bcoz all govt school students prefer only Tamil.

    ReplyDelete
  10. thakuthi ilathavanunga aatchila iruntha elamea kutichuvaruthan..just 12 days ivanunga veetuku poga..

    ReplyDelete
  11. Tamil must be compulsory everywhere, right from prekg to college, up to 12th it must be in depth, college it must develop their communication skills and general knowledge, history must be taught in tamil only, even for matric students.

    ReplyDelete
  12. English knowledge illamal ontrum seiyamudiyathu

    ReplyDelete
  13. தாய்மொழியாகிய தமிழை நீக்குவது தமிழனுக்கு அழகல்ல.தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு தாள்களுமே முக்கியம்.ஏதாவது ஒன்று போதும் என்பது முற்றிலும் தவறு.அரசு ஒரு போதும் இப்படி செய்யக் கூடாது.11,12Th வகுப்புகளுக்கு கட்டாயம் தமிழ் மற்றும் ஆங்கிலம் தாள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  14. English knowledge illamal ontrum seiyamudiyathu தமிழ்நாட்டில் வேலை தேடினாள் ஆங்கிலம் தான் பயன்படுத்துகிறார்கள். தமிழ் பேசினாள் கேவலமாக பார்கிறார்கள். மொழியில் பாடம் இரண்டும் அவசியம்.தமிழ் நாடு எதை நோக்கி போகிறது.

    ReplyDelete
  15. Pg trb ல் தமிழ் ஆசிரியர்களை நீக்கும் நோக்கம்இது..

    ReplyDelete
  16. அதிரடி மாற்றம் என்பதற்காக அறிவுகெட்ட மாற்றத்தை ஏற்க முடியுமா ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி