NHIS திட்டதில் தஞ்சை மாவட்ட TNPTF மீண்டும் ஓர் சாதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2019

NHIS திட்டதில் தஞ்சை மாவட்ட TNPTF மீண்டும் ஓர் சாதனை

கட்டிய முன்பணத்தை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல், காப்பீட்டுத் தொகைக்குள் கொண்டுவரப்படாத பில்களை, இணைக்க நிர்பந்தித்து இறுதியில் முழு தொகையும் பெற்ற சாதனை



********************
சிகிச்சைக்கான மொத்த தொகை-ரூ.68,000

முதல் கட்டமாக -ரூ.20,000

இரண்டாம் கட்டமாக- ரூ.29,000

கட்டிய முன்தொகை ரூ.10,000 திருப்ப பெறப்பட்டது

காப்பீட்டில் கொண்டுவரப்படாத ரூ.9,000 மருந்து பில்லை , காப்பீட்டின் கீழ் கொண்டுவந்து  முழு தொகையும் பெறப்பட்டது..

(20,000+29,000+10,000+9,000= 68,000)

********************

திருவோணம் ஒன்றியம், புதுதெரு பள்ளியின் ஆசிரியர் தோழர் ரேவதி அவர்களது கணவரின் அறுவை சிகிச்சை தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்றது.


முதல் கட்டமாக 20,000 ரூபாய் மட்டுமே காப்பீடாக வழங்கப்பட்டது..

TNPTF தஞ்சை மாவட்ட பொருளாளர் தோழர் மதியழகன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு...

அவர் தோழர் செல்வகணேசன் அவர்களை தொடர்புகொண்டு இரண்டாம் கட்டமாக மேலும் 29,000 பெறப்பட்டது...


பிறகு சிகிச்சைக்காக கட்டிய முன்தொகை 10,000-ஐயும் திருப்பி வழங்கப்பட்டது..


சொந்த செலவில் ரூ.9000 -க்கு வாங்கிய மருந்து பில்லையும் (காப்பிட்டின் கீழ் கொண்டுவரப்படாத பில்) இணைத்து மீட்டும் காப்பீட்டினை வழங்க தோழர் மதியழகன் அவர்கள் நிர்பந்தித்தன் அடிப்படையில் அந்த தொகைக்கும் காப்பீடு வழங்கப்பட்டது.... என்பதை கூறுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்..


TNPTF மாநில மையத்திற்கும், தோழர் செல்வகணேசன் அவர்களுக்கும், தோழர் மதியழகன் அவர்களுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்..


இதை சாத்தியமாக்க இறுதி வரை திடமாக காத்திருந்த தோழர் ரேவதி அவர்களுக்கு TNPTF திருவோணம் வட்டாரக்கிளை சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது..


********************

கட்டணமில்லா மருத்துவ சிகிச்சையை பெற்றதில் மருத்துவமனை நிர்வாகத்திற்கு வேண்டுமானால் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கலாமே தவிர TNPTF தோழர்களுக்கில்லை...


கட்டணமில்லா சிகிச்சை அனைவருக்கும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே நம் தோழர்களின் அவாவும் கூட...

இதை உறுதிப்படுத்தும் வகையில் TNPTF பொதுச்செயலாளர் அவர்கள் கட்டணமில்லா சிகிச்சை அனைவருக்கும் கிடைத்திட வழிவகை செய்திட வேண்டி முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்...


தகவல் பகிர்வு
தேவராஜன்,
தஞ்சாவூர்.

1 comment:

  1. உரிமையைபெற்றதில்மகிழ்ச்சி பெற்றுதந்தசங்கதலைமைக்குநன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி