RTE 25% - ஒதுக்கீட்டில் தேர்வான சிறப்புப்பிரிவினரின் இறுதிப்பட்டியல் மே 31-ல் வெளியீடு: மெட்ரிக். பள்ளி இயக்குநரகம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2019

RTE 25% - ஒதுக்கீட்டில் தேர்வான சிறப்புப்பிரிவினரின் இறுதிப்பட்டியல் மே 31-ல் வெளியீடு: மெட்ரிக். பள்ளி இயக்குநரகம் அறிவிப்பு


கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் தேர்வான சிறப்புப்பிரிவினரின் இறுதிப்பட்டியல் மே 31 ம் தேதி வெளியிடப்படும் என்று மெட்ரிக். பள்ளி இயக்குநரகம் அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களில், சமூகத்தில் நலிந்த பிரிவு, ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு அந்தந்த மாநில அரசுகளே கல்விச் செலவை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த ஆண்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்காக தமிழக அரசு ரூ.218 கோடி நிதியை பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது. இந்த நிதி, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு கடந்த வாரம் முதல் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்காக தமிழக அரசு ரூ.218 கோடி நிதியை பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது. இந்த நிதி, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு கடந்த வாரம் முதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், ஏழை எளிய, நலிந்த பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில்  25 சதவீத இடங்களில் குழந்தைகளை சேர்ப்பதற்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியானது.

இதனை தொடர்ந்து 97 ஆயிரம் பேர் தங்கள் குழந்தைகளுக்கு 25 சதவீத ஒதுக்கீட்டில் இடம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தேர்வான சிறப்புப்பிரிவினரின் இறுதிப்பட்டியல் மே 31 ம் தேதி வெளியிடப்படும் என்று மெட்ரிக். பள்ளி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவல்கள் பட்டியலை வெளியிடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைவான விண்ணப்பங்களைப் பெற்ற 3000 பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின்பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. அதிக விண்ணப்பங்களைப் பெற்ற பள்ளிகளில் ஜுன் 6-ம் தேதி குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி