TET - தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் கோரும்ஆசிரியர்கள்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2019

TET - தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் கோரும்ஆசிரியர்கள்'


'ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 2010 ஆகஸ்ட், 23க்கு பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டத்தை, தமிழக அரசும்அமல்படுத்தியுள்ளது.

இதன்படி, எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பணியில் சேரும், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், மார்ச், 31க்கு பின் பணியில் நீடிக்க முடியாது என, அரசுஉத்தரவிட்டுள்ளது.இதன் முதற்கட்டமாக, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், 1,500 ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால், அவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.அரசின் இந்த உத்தரவு, அரசு பள்ளிகளுக்குமட்டுமின்றி, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்பதால், தனியார் பள்ளி ஆசிரியர்களும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள தகுதி தேர்வுக்கு, மார்ச், 15 முதல், ஏப்., 12 வரை விண்ணப்ப பதிவு நடந்தது. ஆறுலட்சத்துக்கும் மேற்பட்டோர், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மீது, தமிழக அரசு திடீர் நடவடிக்கைஎடுக்க துவங்கியுள்ளதால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளனர்.எனவே, தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி