'TET' தேர்வுக்கு எங்கிருந்து கேள்வி? அரசிடம் 'பதில்' கேட்கும் ஆசிரியர்கள் - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2019

'TET' தேர்வுக்கு எங்கிருந்து கேள்வி? அரசிடம் 'பதில்' கேட்கும் ஆசிரியர்கள் - தினமலர்

டெட் தேர்வுக்கு, நடப்பாண்டு வகுப்பு வாரியாக பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது, தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு (டெட்)தேதியை, கடந்த 15ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆறு லட்சத்துக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், டெட் தேர்வுக்கு வகுப்பு வாரியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் பாடத்திட்டங்களை வெளியிட்டுள்ளது, ஆசிரியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

2011 முதல் நடந்த நான்கு டெட் தேர்வுகளுக்கும், பாடத்திட்டம் குறிப்பிடப்படவில்லை. 

ஒன்று முதல் பிளஸ் 2 வரை பாடபுத்தகங்கள் மற்றும் கல்வி உளவியலை அடிப்படையாக கொண்டே, வினாக்கள் எடுக்கப்பட்டன. இதன்படியே ஆசிரியர்கள் தேர்வுக்கும் தயாராகினர்.

ஆனால், கடந்த ஏப்., 5ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நடப்பாண்டு டெட் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டன. இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பாடபுத்தகங்களும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு பாடபுத்தகங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாடத்திட்டம் குறிப்பிடப்பட்டது வரவேற்புக்குரியது என்றாலும், வினாக்கள் தேர்வு குறித்து குழப்பம் நீடிக்கிறது. மற்ற வகுப்பு பாடங்களிலிருந்து, வினாக்கள் கேட்டால் யார் பொறுப்பேற்பது.

 இதுகுறித்து, அரசே தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

6 comments:

  1. 1.அரசாங்கம் தனியார் கல்வி நிறுவனங்களின் கை கூலிகள் ஆதலால் மூலைக்கு முலை தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்க.இதன் மூலம் ஆண்டுக்கு ஆண்டு பயிற்சி ஆசிரியர்கள் வெளிய வந்து கொண்டுள்ளனர்.இதற்கு முடிவு தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை ஒரு பத்தாண்டு மூடினால் போதும்.
    2.பாடத்திட்டம் படி கேள்வி வந்தால் அனைவரும் தேர்ச்சி இதனால் அனைவருக்கும் வேலை கொடுக்கும் சூழ்நிலை உருவாகும் இதனை சரிக்கட்ட எங்கோ இருந்து கேள்வி கேட்கப்படுகிறது.
    3.அரசாங்கத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவதன் மூலம் ஆண்டுக்கு ஆண்டு தேர்வு கட்டணம் வசூல் செய்ய பாடத்திட்டத்தின் படி கேள்வி கேட்பதில்லை.
    இதுதான் உண்மை தோழர்களே

    ReplyDelete
  2. மிஸ்டர் பணி நியமனம் இல்லை என்றால் அடுத்த அடி சட்டசபை டெபாசிட் கூட கிடைக்காது

    ReplyDelete
  3. மிஸ்டர் டெடபாடி விழித்துக் கொண்டால் நல்லது

    ReplyDelete
  4. ஆளும்கட்சி அரசு 2013,2017 தகுதத் தேர்வு பட்டதாரிகளின் சாபம் சும்மா விடவில்லை. இதுதான் உங்களின் தோல்விக்கான காரணம்.விழித்துக் கொள்ளுங்கள் டெட்பாடி மாங்கொட்டை மண்டையா செங்கோட்டையன் உன் ஊதியத்தை பிடித்தால் பிச்சை செங்கோட்டையன் பதவி விட்டு தூக்கிவிடு அவன் மாறிமாறி பொய் சொல்கிறான் உஙகள் ஆட்சிக்கு தான் ஆபத்து




    ReplyDelete
  5. S eppoludhu vilithukolungal. Give the posting for teachers.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி