யோகா- இயற்கை மருத்துவப் படிப்புகள்: ஜூலை 1- இல் விண்ணப்ப விநியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2019

யோகா- இயற்கை மருத்துவப் படிப்புகள்: ஜூலை 1- இல் விண்ணப்ப விநியோகம்


இயற்கை மருத்து வம் - யோகா படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை 1-ஆம் தேதி தொடங்குகிறது.

பாரம்பரிய மருத்துவப் படிப்புக ளைப் பொருத்தவரை, அரும்பாக் கம் அறிஞர் அண்ணா அரசு பாரம்ப ரிய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரியில் 60 இடங்க ளும், யுனானி மருத்துவக் கல்லூரி யில் 60 இடங்களும், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும் உள்ளன.

அதேபோன்று திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள், மதுரை மாவட்டம் திரு மங்கலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள், நாகர்கோவில், கோட்டாறில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இடங்கள் என 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. இதேபோல 27 தனியார் கல்லூரி களில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,200 இடங்கள் உள்ளன. அவற்றில் யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மட்டும் நிகழாண்டில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதற்கான விண் ணப்ப விநியோகம் வரும் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

www.tnhealth.org ஆகிய இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம், அல்லது யோகா - இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம். ஜூலை 19-ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பாரம் பரிய மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி