814 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு நாளை ஆன்லைன் மூலம் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2019

814 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு நாளை ஆன்லைன் மூலம் தேர்வு


தமிழகத்தில் முதல் முறையாக கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு ஆன்-லைன் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்கள் மற்றும் இளநிலை கணினி அறிவியல் படிப்புடன் பி.எட். முடித்தவர்களும், தேசிய கல்வியியல் கவுன்சில் விதிகளின்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான, கணினி ஆசிரியர்பணிக்கு முதுநிலை படிப்புடன் பி.எட்., முடித்தவர்களும் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என அண்மையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டது.

இதைப் பின்பற்றி, 814 கணினி ஆசிரியர் காலியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கைவெளியிட்டது. இந்தத் தேர்வில் பங்கேற்க ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆண்கள் 7,546 பேர், பெண்கள் 23,287 பேர் என மொத்தம் 30,833 பேர் விண்ணப்பித்தனர். இந்த நிலையில், கணினி ஆசிரியர் நிலை 1-க்கான (முதுநிலை நிலை) கணினி வழித் தேர்வு ஆன்-லைன் மூலமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தேர்வர்கள் நுழைவுச்சீட்டினை பிரதி எடுத்து ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதி ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வுமையத்தின் கதவுகள் மூடும் நேரத்துக்குப் (காலை 9.15) பின்னர் வந்தால் தேர்வர்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவர். தேர்வு அனுமதிச் சீட்டினை தேர்வு மையத்திலேயே தக்கவைத்துக் கொள்ளப்படும். தேர்வர்களின் எதிர்காலத் தேவைக்கு அனுமதிச் சீட்டினைப் பிரதி எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

6 comments:

  1. அவசர அவசரமாக TRB முன் ஏற்பாடுகள் சரியாக செயவில்லை இதனால் இரண்டு study centre hall ticket விட்டு இருக்காங்க

    ReplyDelete
  2. ST.XAVIER’S ACADEMY:
    NEAR HOLY CROSS COLLEGE,
    NAGERCOIL, CELL: 8012381919
    TRB- COMMERCE தேர்வுக்கான பயிற்சி நடை பெற்று வருகிறது.
    கடந்த TRB 2017 தேர்வில் TAMIL பாடத்தில் தமிழகத்திலேயே BC-ல் முதல் மாணவி SOBI (REG. NO-17PG01010800 ) எமது மாணவி என்பது குறிப்பிடதக்கது.

    ReplyDelete
  3. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB TAMIL & Education
    Krishnagiri
    Contact :9842138560

    ReplyDelete
  4. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB TAMIL & Education
    Krishnagiri
    Contact :9842138560
    New batch starts on 23-06-2019

    ReplyDelete
  5. Endha problem illaama exam nadaka venduvom. (like... no technical difficulties)

    Illa na... re-exam kettu oru gumbal kelambidum

    ReplyDelete
  6. Those who are not selected,they are ask 're-exam'.....then also they are ????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி