இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு வழக்கு நிலவரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2019

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு வழக்கு நிலவரம்


2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநில அரசில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் கூட வழங்காமல் பத்தாண்டுகளாக வழங்காததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்-2017 அக்டோபர் மாதம் உயர்நீதிமன்றத்தில்-2017வழக்கு தொடுக்கப்பட்டது.

அது தற்போது இறுதிக்கட்ட விசாரணை நிலையில் உள்ளது கடந்த ஏப்ரல் மாத விசாரணையின் பொழுது வழக்கில் மனுதாரர் எதிர்மனுதாரர் ஆகியோர்களின்ஆவணங்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டு விட்டன அடுத்ததாக இறுதி விசாரணையை மட்டுமே என்று எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வழக்கு மீண்டும் ஜூன் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது, மூன்று மாதத்திற்கு ஒரு முறை நீதியரசர்கள் மாறிவிடுவதால்  தற்போது வழக்கு நீதியரசர் திரு. பார்த்திபன் அவர்களிடம்  அடுத்த ஒரு சில நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது... அடுத்த வாரத்தில் இறுதி விசாரணை தேதி தற்போது இருக்கும் நீதியரசர் குறிப்பிடுவார் அதன் பின்பு நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

தகவல் பகிர்வு

மாநில தலைமை

2009&TET போராட்டக்குழு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி