மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2019

மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!


பள்ளிகளில், அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து, பதிலளிக்கும்படி, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுஉள்ளது.

தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவையின் பொதுச்செயலர், ஜாபர் அலி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:

திருநெல்வேலி மாவட்டத்தில், தனியார் பள்ளிகள் அதிகரித்துள்ளன.அவற்றில், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால், பல்வேறு வகையில், நன்கொடைகள், வாகன கட்டணம் உள்ளிட்டவை வசூலிக்கப்படுகின்றன; இதற்கான ரசீதும் வழங்கப்படவில்லை. இந்த பள்ளிகள் மீது, மாவட்ட நிர்வாகம், எவ்வித நடவடிக்கையும் எடுப்பதுஇல்லை.இவ்வாறு, மனுவில்கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதி துரை ஜெயச்சந்திரன், ''இந்த மனு தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், நான்கு வாரத்தில், விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்,'' என, உத்தரவிட்டார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி