புதிய கல்வி கொள்கை குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர்கள் ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2019

புதிய கல்வி கொள்கை குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர்கள் ஆலோசனை


புதிய கல்வி கொள்கை குறித்து தமிழக பள்ளிக் கல்விஇயக்குநர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்...

மத்திய அரசு சார்பில் புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மும்மொழி கொள்கையை கடைப்பிடிக்கும் அம்சமும் இடம் பெற்றிருந்தது.இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்ததால்இரு மொழி கொள்கையாக வரைவு அறிக்கை திருத்தப்பட்டது.

இந்நிலையில் புதிய கல்வி கொள்கையில் உள்ள அம்சங்கள் குறித்து தமிழக அரசின் கருத்துகளை தெரிவிக்கும் வகையில் நேற்று பள்ளி கல்வி துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன், மெட்ரிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், இயக்குநர்கள் குப்புசாமி அறிவொளி மற்றும் இணை இயக்குநர்கள் பங்கேற்றனர்.சி.பி.எஸ்.இ.யின் முன்னாள் இயக்குநர் பாலசுப்ரமணியனும் பங்கேற்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி