'பள்ளியின் அங்கீகாரத்தை பெற்றோர் சரிபார்த்து, குழந்தையை சேர்க்க வேண்டும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 21, 2019

'பள்ளியின் அங்கீகாரத்தை பெற்றோர் சரிபார்த்து, குழந்தையை சேர்க்க வேண்டும்!


பள்ளியின் அங்கீகாரத்தை பெற்றோர் சரிபார்த்து, குழந்தையை சேர்க்க வேண்டும்' என, சென்னை கலெக்டர், சண்முகசுந்தரம், பெற்றோருக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

சென்னையில், தடையின்மை மற்றும் அங்கீகாரத்தைப் பெறாமல், 331பள்ளிகள் செயல்படுவதாகவும், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நேற்று முன்தினம், சென்னை கலெக்டர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.இது குறித்து, நேற்று அவர் கூறியதாவது:மாவட்ட அதிகாரிகளால், அங்கீகரிக்கப்படாத பள்ளிகளைக் கண்டறிய, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, வழக்கமான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. கண்டறியும் பள்ளிகளுக்கு, உரிய ஆவணங்களுடன் கோப்புகளை சமர்ப்பிக்க, அவகாசம் அளிக்கப்படுகிறது. பதிலளிக்காத பள்ளிகள், அங்கீகரிக்கப்படாத பள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

உரிய ஆவணங்கள் மற்றும் பள்ளி கல்வித் துறையின் விதிமுறைகளின்படி, பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்காத, இந்த பள்ளிகளுக்கு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, இரண்டு அறிவிப்புகளை வழங்கியபின், மூடல் அறிவிப்பு வழங்கப்படும்.போலீஸ் பாதுகாப்புடன் மூடல் அறிவிப்பு, முதன்மை கல்வி அலுவலரால், பள்ளியின் வாயிலில் ஒட்டப்பட்டு, பள்ளிகள் மூடப்படும். பள்ளிகளில் சேர்க்கை பெற விரும்பும் பெற்றோர், அந்த பள்ளியின் அங்கீகாரத்தை, குழந்தையை அனுமதிப்பதற்கு முன், சரிபார்க்க வேண்டும்.

அங்கீகரிக்கப்படாதது தெரிய வந்தால், உடனடியாக, மாவட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அந்த பள்ளிகளின் மீது, விதிமுறைகளின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு, கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.

2 comments:

  1. Neeinga kasu vaingeeteeingana OK illanna no ok

    ReplyDelete
  2. அப்புறம் அரசாங்கம் எதற்கு?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி