புதிய கல்வி கொள்கை குறித்து, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க, தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், கருத்து கேட்பு கூட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2019

புதிய கல்வி கொள்கை குறித்து, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க, தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், கருத்து கேட்பு கூட்டம்


புதிய கல்வி கொள்கை குறித்து, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க, தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.நாடு முழுவதும், கல்வி முறையை மாற்றவும், தரம் உயர்த்தவும், புதிய கல்வி கொள்கையை, மத்திய அரசு தயாரித்துள்ளது.

ஏற்கனவே, காங்., ஆட்சி காலத்தில், ஒரு கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டு, பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், இரண்டு ஆண்டுகளுக்கு முன், கருத்து கேட்கப்பட்டது. இதில், பல்வேறு சர்ச்சையான திட்டங்கள் இருந்ததால், ஆசிரியர்கள், மாணவர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து, அந்த கல்வி கொள்கையை, மத்திய அரசு கைவிட்டு விட்டு, புதிய கல்வி கொள்கையை தயாரித்துள்ளது. இதற்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதிலுள்ள அம்சங்களை செயல்படுத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து, வரும், 30ம் தேதிக்குள், nep.edu@nic.in என்ற, இ - மெயில் முகவரியில், கருத்து தெரிவிக்கலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, ஆசிரியர் சங்கங்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் தரப்பில், தனித்தனியாக கருத்துகள் அனுப்பப்படுகின்றன. மாநில அரசின் கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளன.

தமிழகஅரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க, கருத்து கேட்பு கூட்டம் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துஉள்ளது. மாவட்ட வாரியாக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், பள்ளிகளின்முதல்வர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளை அழைத்து, கருத்துகளை கேட்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி