TRB - கணினி ஆசிரியர் மறுதேர்வு இன்று நடைபெறுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2019

TRB - கணினி ஆசிரியர் மறுதேர்வு இன்று நடைபெறுகிறது.


அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பதவிக்கு, மூன்று மையங்களில், இன்று மறுதேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்விலாவது, காப்பியடிப்பது தடுக்கப்படுமா என, தேர்வர்கள் எதிர்பார்த்துள்ளனர்.அரசுபள்ளிகளில், முதுநிலை கணினி ஆசிரியர் பதவிக்கு, 814 காலியிடங்களை நிரப்ப, கடந்த, 23ல் தேர்வு நடத்தப்பட்டது.

30 ஆயிரம் பேர் விண்ணப்பித்த, இந்த தேர்வில், கணினி, 'சர்வர்' தொழில்நுட்ப கோளாறால், பலர் தேர்வு எழுத முடியாமல் போனது.மேலும், மாணவர்கள் குழுவாகச் சேர்ந்து காப்பியடித்தது என, பெரும் குளறுபடி ஏற்பட்டது. இதையடுத்து, மூன்று தேர்வு மையங்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்தது.இந்நிலையில், இன்று மறுதேர்வு நடத்தப்படுகிறது. இதில், 1,221 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த மறுதேர்விலாவது, தேர்வர்கள் காப்பியடிப்பது தடுக்கப்படுமா என, பள்ளி கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

இதற்கிடையே, குளறுபடியுடன் நடந்த, கணினி ஆசிரியர் தேர்வை ரத்து செய்து, அனைத்து மாவட்டங்களுக்கும், எழுத்து தேர்வு நடத்த வேண்டும் என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, வேலையில்லா கணினி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ள கட்டட வளாகம் முன், நேற்று போராட்டம் நடத்தினர்.

1 comment:

  1. இது எப்படி இருக்குதுனா...
    தப்பே செய்யாதவனுக்கு குளறுபடி யான சூழலில் வாய்ப்பு கொடுத்து
    முழுநாள் முழுவதும் நேரத்தையும், உடல் வழுவற்றநிலையில் எந்த விதமான உணவு, தண்ணீர் ஏற்படுகள் இன்றியும் தேர்வை நேர்மையாக சந்தித்த ஒரே காரணத்திற்கு
    தண்டனையாக மறுவாய்ப்பற்ற நிலையிலும்,
    காப்பி அடித்தல்,குழுவிவாதம் செய்தல்,தொலைப்பேசியில் பொருமையாக விடேயை தேர்வு செய்து மனசாட்சி யுடனே
    தப்புசெய்தவனுக்கு மறுவாழ்வும் தருவது போல் மறுதேர்வு நடத்த அனுமதி அழிப்பதும் ஆக என்ன நேர்மைக்கும்,உண்மைக்கும் கிடைத்த பரிசு என மனம்மகிழ்ச்சியில் திகழ்கிறது.......

    நேர்மைக்கு கிடைத்த பரிசாக அனைவரும் கருதி புத்தராக மௌனப்புரட்சி செய்ய வேண்டும்....
    வாழ்க pgtrb!,
    வளர்க உங்கள் சேவை!
    ஜெய் digital india!....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி