தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2019

தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பி.தியாக ராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி மூலம் பி.ஏ. தமிழ், ஆங் கிலம், சமூகப்பணி, வரலாறு மற்றும் பிஎஸ்சி உள்ளிட்ட 41 இள நிலை படிப்புகளையும் எம்பிஏ, எம்சிஏ, எம்ஏ தமிழ், வரலாறு, ஆங்கிலம் உள்ளிட்ட 39 முதுநிலை படிப்புகளையும், 17 முதுகலை டிப்ளமா படிப்புகளையும், 42 டிப்ளமா படிப்புகளையும், 39 சான்றிதழ் படிப்புகளையும் வழங்கி வருகிறது. இப்படிப்புகளில் 2019-2020-ம் கல்வி ஆண்டில் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் www.online.tnou.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்திவருகிற 31-ம் தேதி ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தருமபுரி, மதுரை, திருநெல்வேலி , நீலகிரி ஆகிய இடங்களில் உள்ள பல்கலைக்கழகத்தின் மண்டல மையங்கள் வாயிலாகவும் விண் ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங் களுக்கு 044-24306663, 64 ஆகிய தொலைபேசி எண்களில் பல் கலைக்கழகத்தை தொடர்புகொள் ளலாம். இவ்வாறுசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி