பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப்பொதுத்தேர்வு: இன்று மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2019

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப்பொதுத்தேர்வு: இன்று மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு


தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல்வெளியிடப்படவுள்ளது.

இதையடுத்து தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதையடுத்து மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வரும் 15, 16 ஆகிய இரு நாள்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். இரு தாள்கள் கொண்ட மொழிப் பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.305, பிற பாடங்களுக்கு ரூ.205 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தத் தகவலை அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி