கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2019

கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. உத்தரவு


கல்வியியல் கல்லூரிகளில் படிக் கும் மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக பதிவாளர் (பொறுப்பு) வை.பாலகிருஷ்ணன், அனைத்து தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் செயலர்கள் மற் றும் முதல்வர்களுக்கு அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:

கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை உறுதிசெய்யும் பொருட்டு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு கருவி பொருத்தாத கல்லூரிகள் உடனடி யாக அந்த சாதனத்தை பொருத்த வேண்டும். கல்லூரிகள் பயோ- மெட்ரிக் கருவியின் வாயிலாக பதிவுசெய்யப்படும் வருகைப் பதிவு விவரத்தை வாரம் ஒருமுறை கல்லூரியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன் சில் (என்சிடிஇ) விதிப்படி பராமரிக் கப்பட வேண்டிய பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண் டும். கல்லூரிகள் மீது எவ்வித புகார் களும் எழாத வண்ணம் சீரிய முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி