சட்டப்பேரவைக்கு நேரில் சென்ற அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2019

சட்டப்பேரவைக்கு நேரில் சென்ற அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்


தமிழக சட்டப்பேரவையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நாளையுடன் சட்டப்பேரவை முடிவடைகிறது.

ஒவ்வொரு நாளும் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக காண பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும், கல்லூரி, பள்ளி மாணவர்களும் ஆர்வமுடன் வருகின்றனர். நேற்று காலை சட்டப்பேரவை நிகழ்ச்சியை காண  உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட மருதம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த 44 மாணவ, மாணவிகள் மற்றும் 7 ஆசிரியர்கள் பேரவை வளாகத்திற்கு வந்தனர்.அவர்களை உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ சுந்தர்,  நேரில் வரவேற்றார்.

பின்னர், சட்டப்பேரவை மாடத்திற்கு வரிசையாக சென்ற மாணவர்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளை கண்டுகளித்தனர். மேலும், முதல்வர், எதிர்கட்சி தலைவர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் கண்டதும், விவாதங்களை நேரடியாக பார்த்ததும் ஆச்சரியமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி