School Morning Prayer Activities - 23.07.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2019

School Morning Prayer Activities - 23.07.2019


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.07.19

திருக்குறள்


அதிகாரம்:அருளுடைமை

திருக்குறள் 243:

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

விளக்கம்:

அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்.

பழமொழி

A guilty conscience needs no accuser

 குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பேன்
2. இயற்கை சமநிலை பேணிபாதுகாப்பேன். அதற்காக என் பங்களிப்பை செலுத்துவேன்.

பொன்மொழி

ஆயிரம் பேர் உமக்கு ஆலோசனைகள் வழங்கினாலும் உனது
முடிவே இறுதியாகிறது..
நன்றும் மீதும் முடிவின் பலனாகிறது...

------ ஸ்ரீ ராமகிருஷ்ணர்

பொது அறிவு

* செம்மண் நிறம் சிவப்பாக இருக்க காரணமான தாதுவின் பெயர் ?

 இரும்பு ஆக்ஸைடு

* விமானம் பறக்கும் உயரத்தை அளக்க உதவும் கருவியின் பெயர் என்ன ?

அல்ட்டிமீட்டர்

English words & meanings

* Grapes - a vine, திராட்சை கொடி
ரசம் தயாரிக்க சிறந்தது.
காய்ந்த திராட்சையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.

* Gazelle - a type of small deer வனப்பு மிக்க வெளிமான்.
மணிக்கு 97 கி. மீ. வேகத்தில் ஓட கூடியது.

ஆரோக்ய வாழ்வு

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருள் வெண்டைக்காயில் உள்ளது.

Some important  abbreviations for students

* IDES - Indian Defence Accounts Service

* IPTAS - Indian Post & Telecom Accounts Service

நீதிக்கதை

"கடற்கரை ஓரம் இருந்த ஊரில் ஒரு கலங்கரை விளக்கு இருந்தது. அந்தக் கடற்கரை ஒரம் கப்பல் போக்குவரத்து அதிகம்.

பாறைகள் நிறைந்த கடல் பகுதியானதால் கப்பல்கள் பாறைப் பகுதியைத் தவிர்த்து பத்திரமாகச் செல்ல வகை செய்யும் வண்ணம் அந்தக் கலங்கரை விளக்கை அமைத்திருந்தார்கள். எண்ணையால் எரியும் விளக்கு அது.

கலங்கரை விளக்கை செயல்படுத்த ஒரு காப்பாளன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

வாராவாரம் கலங்கரை விளக்கிற்குத் தேவையான எண்ணையை கப்பல் நிறுவனங்கள் அவனுக்குத் தப்பாமல் அனுப்பிக் கொண்டிருந்தன.

காப்பாளனின் முக்கியமான வேலை கலங்கரை விளக்கைக் காப்பது மற்றும் விளக்கு அணையாமல் அதைச் செலுத்திக் கொண்டிருப்பது மட்டுமே.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது

ஒரு கடுங் குளிர்கால இரவில் கலங்கரை விளக்கின் அலுவலகக் கதவை யாரோ தட்டினார்கள். காப்பாளன் கதவைத் திறந்து பார்த்தான். பக்கத்து ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தார்.

“தம்பி! என் வீட்டில் விளக்கெரிக்கக் கூட எண்ணை இல்லை. குளிர் நடுக்குகிறது. நீ மிகவும் நல்லவனாகத் தெரிகிறாய். கொஞ்சம் எண்ணை கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். சீக்கிரம் திருப்பிக் கொடுத்து விடுவேன்” என்று கெஞ்சினார்.

மனம் இளகிய காப்பாளன் அவருக்குக் கொஞ்சம் எண்ணை கொடுத்தனுப்பினான்.

அடுத்த நாள் இரவு மறுபடியும் கதவில் “டக்… டக்”. கதவைத் திறந்தால் ஒரு வழிப்போக்கன். “அண்ணே! பக்கத்து ஊரில் உங்கள் உதவும் குணத்தைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார்கள். நான் அவசரமாக ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். மிகவும் முக்கியமான வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறேன். இங்கே தங்க முடியாத நிலை. என் கை விளக்கில் எண்ணை தீர்ந்து விட்டது. பயணத்திற்கு எண்ணை கொடுத்து உதவினால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்” என்று வெகு இளக்கமாகப் பேசினான்.

காப்பாளனும் வழிப்போக்கனுக்கு எண்ணை கொடுத்த்னுப்பினான்.

மூன்றாம் நாளும் இதே கதை தொடர்ந்தது. இப்போது கதவைத் தட்டியது ஒரு மூதாட்டி. “ராசா. நீ நல்லாயிருக்கணும். வீட்டில் பச்சைக் குழந்தைக்குப் பால் காய்ச்ச அவசரமாக அடுப்பு எரிக்கணும். வீட்டில் எண்ணை தீர்ந்து போய் விட்டதப்பா! எனக்கு உன்னை விட்டால் வழியில்லை என்று வந்து விட்டேன். நீதான் அவசரத்துக்குக் கடவுள் போல் கை கொடுத்து உதவணும்” என்றாள்.
அவளுக்கும் காப்பாளன் எண்ணை கொடுத்தான்.

வாரக் கடைசி. அடுத்த வாரத்திற்கான எண்ணையைக் கொண்டு வரும் வண்டி வர இரண்டு நாளாகும். காப்பாளன் வழக்கம் போல விளக்கிற்கு எண்ணை நிரப்ப பீப்பாயைத் திறந்து பார்த்தான். பீப்பாயில் இருந்த எண்ணை வாரக் கடைசி வரை விளக்கைச் செலுத்தப் போதாது என்று புரிந்தது.

இருந்த எண்ணையை விளக்கில் நிரப்பி அதை எரிய விட்டு விட்டு பதறிப் போய் ஊருக்குள் ஒடினான். மிக அவசரமாக விளக்கிற்கு எண்ணை தேவை. கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டான். எல்லோரும் கை விரித்து விட்டார்கள்.
அவன் திகைத்து நின்றான். ஏழைகளுக்கு இரங்க வேண்டும் அப்போது நம்மை கடவுள் காப்பாற்றுவார் என்று சிறு வயதில் சொல்லி கொடுக்க பட்டது ஞாபகம் வந்தது.
அவர்கள் வாக்கு தவறினாலும் தான் கடமை தவறக் கூடாது என்று கடவுளை வேண்டினான். சிறிது நேரத்தில் ஒரு கப்பல் கம்பெனி அவர்கள் வார முடிவில் வர முடியாது என்றும் அதனால் இரண்டு நாட்களுக்கு முன்னரே எண்ணெய் கொண்டு வந்ததாகவும் கூறினர். அவனின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. நடந்த உண்மையை கூறி இன்னும் சிறிது அதிகம் எண்ணெய் தரும் படி வேண்டினான் அவர்களும் கொடுத்து சென்றனர்.
இரக்கம் மற்றும் கடமை உணர்வு கொண்ட காப்பானை பாராட்டினர்.

செவ்வாய்

English & ART

Who am I?
People blow air in me.
I come in many colours.
I'm a symbol of celebration.
Both children and adults love me
Don't touch me with anything sharp.
I only last a day or two.

கலையும் கைவண்ணமும் - 31

காணொலியை காண இங்கே கிளிக் செய்யவும்

இன்றைய செய்திகள்

23.07.2019

* நிலவின் தென்துருவத்தை ஆராயும் சந்திராயன்-2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

* சிசிலி தீவில் வெடித்து சிதறியது ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா.

* ஐ.என்.ஏ.எஸ். 313 டார்னியர் ரக போர் விமானத்தை இந்திய கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற்றது.

* ஆசிய பாட்மின்டன் ஜூனியர் சாம்பியன்ஷிப் காலிறுதியில் இந்திய அணி முன்னேறியது.

* காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், இந்திய நட்சத்திரம் அசந்தா சரத் கமல் போராடி தோற்றார்.

Today's Headlines

🌸Chandrayaan-2 probing the Moon's south pole has successfully launched.

 🌸Mount Edna, Europe's largest volcano, erupted on the island of Sicily.

 🌸INAS  313 Dornier war plane accompaning with the Indian Navy was held in Chennai.

 🌸The Indian team advanced to the quarterfinals of the Asian Badminton Junior Championships.

 🌸 In the men's singles event of the Commonwealth Table Tennis Tournament, Indian star Ashanta Sarath Kamal lost after great struggle.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி