அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும், 1ம் தேதி திறக்கப்படுகின்றன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2012

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும், 1ம் தேதி திறக்கப்படுகின்றன.

ஏற்கனவே அறிவித்தபடி, அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும், 1ம் தேதி திறக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், 4ம் தேதி முதல் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளன. கோடை விடுமுறைக்குப் பின், மீண்டும் பள்ளிக்கு கிளம்ப மாணவர்கள் தயாராகி வருகின்றனர். கடந்த ஆண்டு, பாடப் புத்தகங்கள் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டதால், 15 நாட்கள் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், கல்வியாண்டு முழுவதும் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன.பொதுத்தேர்வும், தள்ளிப்போனது. பாடப் புத்தகங்களில் உள்ள குறைகள் சரி செய்யப்பட்டு, புதுப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு முன்கூட்டியே வினியோகிக்கப் பட்டுள்ளன. எனவே,ஏற்கனவே அறிவித்தபடி 1ம் தேதி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூன் 1ம் தேதி வெள்ளிக் கிழமை வருகிறது. அதன்பின், சனி, ஞாயிறுவார விடுமுறை நாட்கள். எனவே, 4ம்தேதி திங்கட் கிழமையில் இருந்து பள்ளிகளை துவங்குவதற்கு, பெரும்பாலான தனியார் பள்ளி நிர்வாகங்கள் முடிவு செய்து, அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.வேலை நாட்கள் விவரம் : பள்ளிக் கல்வியின் கீழ் இயங்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள்,ஜூன் 1ல் துவங்கி, 2013 ஏப்ரல் 20ம் தேதி வரை, 200 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 2013 ஏப்ரல் 30ம் தேதி வரை, 220 நாட்கள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி