இந்தாண்டு பிளஸ் 2 முடித்தமாணவர்களுக்கு கட்டாயம் லேப்டாப் உண்டு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2012

இந்தாண்டு பிளஸ் 2 முடித்தமாணவர்களுக்கு கட்டாயம் லேப்டாப் உண்டு!

கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உறுதியாக"லேப்டாப்" வழங்கப்படும், என, முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் அரசு உத்தரவாதம் வழங்கியுள்ளது.கடந்த சட்டசபை தேர்தலின்போது, அரசுமற்றும் உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் பிளஸ் 2 மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கு அரசு இலவசமாக "லேப்டாப்" வழங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநில அளவில், கடந்த ஆண்டு (2011) பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் பெயர் பட்டியல் எடுக்கப்பட்டது.அவர்களுக்கு மாவட்ட வாரியாக இலவசமாக "லேப் டாப்" வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், "லேப் டாப்" தயாரிக்கும் பணியில் ஏற்பட்ட தொய்வால், பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்னும் வழங்கவில்லை. இதற்கிடையில், இந்த கல்வி ஆண்டில்(2011-2012) மாநில அளவில் 8 லட்சத்து 23 ஆயிரத்து 208 மாணவர்கள் பிளஸ் 2 அரசு பொது தேர்வு எழுதினர்.இவர்களில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களின் பெயர் பட்டியல் அந்தந்த முதன்மை கல்வி அலுவலகம் மூலம் சேகரிக்கப்பட்டது. அவர்கள் தற்போது, தேர்வு முடிந்து பள்ளியை விட்டுசென்று விட்டதால், தங்களுக்கு அரசு அறிவித்தபடி இலவச"லேப்டாப்" கிடைக்குமா என்ற சந்தேகம் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது: கடந்த வாரம் சென்னையில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசின் இலவச திட்டங்கள் குறித்த அறிக்கை சேகரிப்பு கூட்டம் நடந்தது. அப்போது இந்த தகவல் அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. அக்கூட்டத்தில், கடந்த கல்வி ஆண்டுபிளஸ் 2 முடித்து சென்ற மாணவர்களுக்கு "லேப்டாப்" கட்டாயம் உண்டு, என அரசு உறுதி வழங்கியுள்ளது. இதற்காக, இன்று (மே 30) முதல் பள்ளிகளில் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அதன் பின்புறம், "லேப் டாப்பிற்கு" தகுதி பெற்ற மாணவர் என "சீல்" அடித்து தரப்படும். "லேப்டாப்" வந்தவுடன் மாணவர்களுக்கு அறிவித்து வழங்கப்பட்ட பின், மதிப்பெண் பட்டியல் பின்புறம்"வழங்கப்பட்டது" என எழுதப்படும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி