மதிப்பெண் சான்றிதழ் 30ம் தேதி முதல் விநியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2012

மதிப்பெண் சான்றிதழ் 30ம் தேதி முதல் விநியோகம்

பிளஸ் 2-க்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவ, மாணவிகளின் மதிப்பெண் பட்டியல் வரும் 30ம் தேதி முதல் அவரவர் படித்த பள்ளிகளின் மூலம் மாணவர்களுக்கு விநியோகிக்‌கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும், தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வெழுதிய பள்ளியில் மதிப்பெண் பட்டியல் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளது.பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடுநடைமுறையில் மாற்றம்பிளஸ் 2 தேர்வு முடிவு நடைமுறைகள் மாற்றம் செய்யப்பட்டு, பள்ளிகளுக்கு எளிமையாக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடுவதற்கு முதல் நாளே, முதன்மை கல்வி அலுவலக அலுவலர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் தேர்வு முடிவுகள் "சிடி'யாக வழங்கப்படும்.அலுவலர்கள், "சிடி' யில் உள்ள விபரங்களை தொகுத்து, பள்ளி வாரியாக பிரின்ட் எடுத்து, அந்தந்த பள்ளி தலைமையாசிரியரை வரவழைத்து வழங்குவது, கடந்தாண்டு வரை நடைமுறையில் இருந்தது. இதன் மூலம், தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே, பல இடங்களில் முடிவுகள் தெரிந்து விடுகிறது.இதை கட்டுப்படுத்த, "தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிடும் போது, அந்தந்த பள்ளிகள் இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இதற்காக அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள் அலைய வேண்டியதில்லை,' என, புதிய நடைமுறையை தேர்வுத்துறை அமல்படுத்தி உள்ளது.முந்தைய முறையில், முதன்மை கல்வி அலுவலகத்திலே பள்ளி முடிவுகளை எடுத்து, மாவட்ட அளவில் முதன்மை பெறுபவர்கள் பட்டியல் உடனயாக பெற முடிந்தது. தற்போதைய நடைமுறை மாற்றத்தால், பள்ளிகளுக்கு எளிமையாக இருந்தாலும், மாவட்டஅளவில் முதன்மை பெற்றவர்களை கண்டறிவதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி