குரூப்-4 தேர்வுக்கு ஜூன் 4 வரை கால அவகாசம் நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2012

குரூப்-4 தேர்வுக்கு ஜூன் 4 வரை கால அவகாசம் நீட்டிப்பு.

குரூப் - 4 தேர்வுக்கு, இதுவரை 9.5 லட்சம் பேர் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை, ஜூன் 4 வரை நீட்டிப்பு செய்து, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.எனவே, கடைசி தேதிக்குள், விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 13 லட்சமாக உயரலாம் என, டி.என்.பி.எஸ்.சி., செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.குரூப் - 4 நிலையில், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் மற்றும் வரைவாளர் ஆகிய பதவிகளில், 10 ஆயிரத்து 718 காலிப் பணியிடங்களை நிரப்ப, ஜூலையில் போட்டித் தேர்வு நடக்கிறது.இதற்கு, ஏப்ரல் 27 முதல், இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கான கடைசி நாள் 28ம் தேதியுடன்முடியும் நிலையில், ஜூன் 4 வரை நீட்டிப்பு செய்து, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.இது குறித்து, தேர்வாணையச் செயலர் உதயசந்திரனிடம் கேட்ட போது,"இதுவரை 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தினமும், 60 ஆயிரம் பேர் முதல் 70 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிக்கின்றனர். எனவே, அனைவருக்கும் போதிய கால அவகாசம் வழங்கும் வகையில், காலக்கெடுவை ஜூன் 4 வரை நீட்டித்துள்ளோம்.விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணத்தை, ஜூன் 6 வரை செலுத்தலாம்.கடைசி தேதிக்குள், மொத்த பதிவுதாரர்கள் எண்ணிக்கை 13 லட்சம் வரை உயரலாம்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி