அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமனத்திற்கான தகுதிகள் -தமிழக அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2012

அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமனத்திற்கான தகுதிகள் -தமிழக அரசு அறிவிப்பு.

தமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 299 நாள். 19.05.2012அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள்நியமனத்திற்கான பணிகள் தீவரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு பிறகு முதற்கட்டமாக 11432 பணியிடங்களுக்கான தகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமனத்திற்கான தகுதிகள் :-* பெண்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யலாம்.* 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.* அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்கள் 25 - 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.* உதவியாளர்கள் நியமனத்திற்கு 25 - 35 வயதிற்குள் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.* .அங்கன்வாடி பணியாளர் பணிக்குரூ.2500-5000 + தர ஊதியம் ரூ.500/- என்ற விகிதத்திலும், குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு ரூ.1800-3300 + தர ஊதியம் ரூ.400/- என்ற விகிதத்திலும்,உதவியாளர் பணிக்கு ரூ.1300-3000+ தர ஊதியம் ரூ.300/- என்ற விகிதத்திலும் உரிய படிகளுடன் வழங்கப்படும்.* விண்ணப்பம் வழங்கும் நாள், விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி நேர்முகத் தேர்வு மற்றும் இதர விபரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்களால் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என்று அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.* அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்ய...* தமிழக அரசின் செய்தி வெளியீடுஎண். 299 நாள். 19.05.2012 பதிவிறக்கம் செய்ய...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி