பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு இல்லை: சென்னைஉயர் நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2012

பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு இல்லை: சென்னைஉயர் நீதிமன்றம்

பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத் தலைவர் எஸ்.சண்முகம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் பதவி உயர்வுகளில் இந்த ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது என்றும், ஆகவே பதவி உயர்விலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார்.இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே.சந்துரு, வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது எனவும், ஆனால் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் எதுவும் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி