தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலக நிர்வாகத்தின் கீழ், கொண்டு வரக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2012

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலக நிர்வாகத்தின் கீழ், கொண்டு வரக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்

திரு.தாஸ் அவர்கள், தாக்கல் செய்த மனு: ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 1981ம் ஆண்டு, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதில் பணியாற்றிய ஆசிரியர்களும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். தொடக்கக் கல்விக்கெனதனி இயக்குனரகம் உருவாக்கப்பட்டது.அரசின் கட்டுப்பாட்டின் கீழ், தொடக்கமற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் வந்தாலும், அவர்களின் பி.எப்., கணக்கை, உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், நிர்வகித்து வந்தனர்.பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகம், தணிக்கை செய்வதில்லை. இதனால், தங்களின் பி.எப்., கணக்கில் எவ்வளவு பணம் செலுத்தப்படுகிறது என்கிற தெளிவான விவரங்கள், ஆசிரியர்களிடம் இல்லை. இந்தக்கணக்கை, அவர்களால் சரிபார்க்கமுடியவில்லை. தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் பி.எப்., கணக்கைகண்காணிக்க, முறையான நிர்வாக நடைமுறை இல்லை. இந்தக் குழப்பங்களால், பி.எப்., நிதியில் சிலர் முறைகேடு செய்கின்றனர். தற்போது, பி.எப்., கணக்கை அரசு தகவல் தொகுப்பு விவர மையம் நிர்வகிக்கிறது. இங்கு பணியாற்றும் சிலர், தற்காலிக ஊழியர்களாக உள்ளனர். பி.எப்., நிதி, தணிக்கைக்கு உட்பட்டது. 85 ஆயிரம் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கில் வரும் பணத்தை நிர்வகிக்க, தணிக்கை செய்ய, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகம் போல், எந்த தனிப்பட்ட அலுவலகமும் இல்லை. இதனால், சில நகரங்களில் பி.எப்., நிதியில் முறைகேடுகள்நடந்துள்ளது. ஒவ்வொரு மாதமும்சராசரியாக, 210 கோடி ரூபாய், பி.எப்., மூலம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களிடம் வசூலிக்கப்படுகிறது. எனவே, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலக நிர்வாகத்தின் கீழ், கொண்டு வரக் கோரிய மனுவை பரிசீலிக்குமாறு, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவுக்குப் பதிலளிக்கும்படிஅரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி