அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்கள் : தமிழக அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2012

அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்கள் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, ஜூன் 30 : தமிழக அரசு ஊழியர்களின் நலனை பேணும் வகையில், தமிழக முதலமைச்சர்ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.இது குறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,"1.4.2012 முதல் அரசு ஊழியர்களுக்காக வழங்கப்படும் வீடு கட்டும் முன்பணக் கடன் உச்சவரம்பினை 15 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், அகிலஇந்திய பணி அலுவலர்களுக்கான வீடு கட்டும் முன்பண உச்சவரம்பினை 25 லட்சம் ரூபாயிலிருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இதுபோன்று, அரசு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மேம்படுத்தி வரும் நான்கு ஆண்டுகளுக்கு,அதாவது 1.7.2012 முதல் 30.6.2016 வரை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.இந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கெனவே ஒப்புதலளிக்கப்பட்ட 52 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுடன், கூடுதலாக 61 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி 113 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன, அதுபோல் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சமருத்துவக் காப்பீட்டு நிதி உதவியான 2 லட்சம் ரூபாய் என்பது 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அளவிற்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் அரசு ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின்கீழ் அரசு பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், கிராம உதவியாளர்கள் போன்ற பணியாளர்கள், உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசின் கீழ் வரும் பல்கலைக் கழகங்கள் ஆகிவற்றைச் சேர்ந்த பதிமூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பணியாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி