அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான - மருத்துவ உதவி - புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் - தொடக்கக்கல்வி துறையில் நடைமுறைப்படுத்த இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2012

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான - மருத்துவ உதவி - புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் - தொடக்கக்கல்வி துறையில் நடைமுறைப்படுத்த இயக்குநர் உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 014210 / சி 3 / 2012, நாள். 12.06.2012அரசாணை எண். 139 நிதித் (ஊதியப்பிரிவு) துறை நாள். 27.04.2012 ன் படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.தொடக்கக்கல்வித் துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அரசு அறிவித்துள்ள புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை நடைமுறைபடுத்த இயக்குனர் உத்தரவிட்டுள்ளதையடுத்து ரூ.25/- ஆக இருந்த மருத்துவ காப்பீட்டுக்கான மாதசந்தா ஜூன் 2012 முதல் ரூ.75/- ஆக பிடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.அதேபோல் இத்திட்டத்திற்கான உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பழைய திட்டத்தில் இருந்த குறைபாடுகள் நீக்கி புதிய சிகிச்சைகள் மேற்கொள்ளவும் இத்திட்டத்தின் மூலம் அரசு உததரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி