CCE - கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் பள்ளிகளை பார்வையிடுதல் - அறிக்கை சமர்பித்தல் குறித்த செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2012

CCE - கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் பள்ளிகளை பார்வையிடுதல் - அறிக்கை சமர்பித்தல் குறித்த செயல்முறைகள்

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை - பார்வை அறிக்கை படிவம்...சென்னை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் ந.க.எண். 796/ ஈ2 / 2012 , நாள். 15.06.2012தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பாக தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்கள் தற்பொழுது தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின் அடிப்படையில் வகுப்புகளை இக்கல்வியாண்டில் கையாண்டு வருகின்றனர்.இம்முறையினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் வலுவூட்டதல் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.எனவே அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், மெற்றிக் பள்ளி ஆய்வாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் அனைவரும் 2012 ஜூன் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்களில் ஐந்து பள்ளிகளுக்கு சென்று தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு நடைமுறைப்படுத்தும் முறையினை உற்றுநோக்கி, இம்முறையினை செயல்படுத்தும் பொழுது ஆசிரியர்களுக்கு எழும் ஐயங்களையும், இடர்பாடுகளையும் கண்டறிந்து அவற்றை அறிக்கையாக தயார் செய்து அவ்வறிக்கையினை ஒன்றிய மேற்பார்வையாளர்கள் மூலம் 22.06.2012 அன்று தனி நபர் மூலம் படிவங்களின் தொகுப்பினை முதல்வர், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அவர்களிடம் சமர்பிக்கவ்வும், சமர்ப்பித்தற்கான அறிக்கையினைஅனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி