பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் 18 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2012

பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் 18 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்று தமிழகத்தில் 18 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.தமிழ்நாடு இடைநிலை
ஆசிரியர் சங்க மாநில தேர்தல் திருச்சியில் நடந்தது. தேர்தல் ஆணையர்களாக நெடுஞ்செழியன், பாசி செயல்பட்டனர்.இதில் சென்னையை சேர்ந்த கயத்தாறு மாநில தலைவராகவும்,நெல்லை இசக்கியப்பன் பொது செயலாளராகவும்,புதுக்கோட்டை மதலை முத்து
பொருளாளராகவும்,திருச்சி அருணகிரியார் அமைப்பு
செயலாளராகவும்,காஞ்சிபுரம் வெங்கடேசன் தலைமை இட செயலாளராகவும்,கன்னியாகுமரி எட்வின் பிரகாஷ் துணை பொது செயலாளராகவும், மாநில செயலாளராக
சென்னை ஜெயராணி,மாநில தணிக்கையாளர்களாக
நெல்லை பாபு, மாநில துணைத் தலைவர்களாக வேலூர் பாக்கியராஜ், திருவண்ணாமலை நவநீத சுந்தர், மாநில
இணை செயலாளர்களாக விருதுநகர் அப்பாதுரை,
விழுப்புரம் ஸ்டீபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.பின்னர் புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழகத்தில் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 18 ஆயிரம்
இடைநிலை ஆசிரியர்களை 1.6.2006 க்கு முன்பிருந்து
பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். பிளஸ் 2 முடிக்காமல் பதவி உயர்வில் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஆசிரியர் பட்டய படிப்பை பிளஸ் 2க்கு இணையாக கருதி சென்னை ஐகோர்ட்
அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்
தகுதி தேர்வை ரத்து செய்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனங்களை மாநில சீனியாரிட்டி
அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி