கூட்டுறவு துறையில் 3,589 பேரை நியமிக்க புதிய பணியிடம் உருவாக்கி உத்தரவ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2012

கூட்டுறவு துறையில் 3,589 பேரை நியமிக்க புதிய பணியிடம் உருவாக்கி உத்தரவ

தமிழக கூட்டுறவு துறையில், 3,589 பேரை நியமிக்க,
புதிய பணியிடத்தை உருவாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில்,பத்து ஆயிரத்து, 442
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன.இச்சங்கங்களில், 2012 மார்ச், 31ம் தேதி வரை,
கடன் நிலுவை அடிப்படையில் பணியாளர்களின்
பணிநிலை திறனில் திருத்தம் செய்து,கூட்டுறவு பதிவாளர் அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடன் நிலுவை, 10 கோடி ரூபாய்க்கு மேலுள்ள,
ஒவ்வொரு மூன்று கோடி ரூபாய்க்கும்,ஒரு உதவியாளரை நியமனம் செய்து கொள்ள உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் சங்கங்களில்,
குறைந்தது, 25 கோடி ரூபாய் முதல்,அதிகபட்சம், 50
கோடி ரூபாய் வரை,கடன் நிலுவை உள்ளது. இதில், 25 கோடி கடன் நிலுவை எனில், 10 கோடி ரூபாய் போக,
மீதமுள்ள, 15 கோடியில்,ஒவ்வொரு மூன்று கோடி ரூபாய்க்கு,ஒருவர் வீதம்,ஐந்து பேரும், அதன்
அடிப்படையில், 50 கோடி கடன் நிலுவைக்கு, 13 பேர்
வீதம், புதிதாக நியமித்து கொள்ளலாம். தற்போது,
கூட்டுறவு துறையில், 3,589 பணியிடங்கள் நிரப்ப,
ஆளெடுக்கப்பட உள்ளது.அவ்வாறு தேர்வு செய்யப்படுவோர், கடன் சங்கங்களில்,உதவியாளராக
நியமிக்கப்பட உள்ளனர்.இந்த நியமனத்தை, 50
சதவீதம்,நேரடியாகவும்,பதவி உயர்வு மூலமும்
பூர்த்தி செய்து கொள்ள, புதிய திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.கடன் சங்கத்தில் பணியாற்றும்
சிற்றெழுத்தர்,ரேஷன்கடை சேல்ஸ்மேன் ஆகியோர்
உதவியாளராக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு,
உருவாகி உள்ளதால்,ரேஷன்கடை பணியாளர்கள், பலத்த வரவேற்பு தெரிவித்துள்ளனர் இதற்கு முன்,
ஐந்து கோடி ரூபாய்க்கு மேல்,எவ்வளவு கடன் நிலுவை இருந்தாலும், இரு உதவியாளர் பணியிடம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.அவர்களோடு சேர்ந்து,
சங்க செயலர்,உதவி செயலர், சீனியர் கிளர்க், அலுவலக
உதவியாளர்,சிற்றெழுத்தர் என,ஏழு பேர் மட்டுமே பணியில் இருந்தனர். புதிய திருத்தத்தின் மூலம்,
குறைந்தது, 12 பேர் முதல், அதிகபட்சம், 20 பேர்
வரை பணியாற்றும் நிலை உருவாகியுள்ளது. ஆளெடுப்பு காரணமாகவே,பணிநிலை திறனில்
திருத்தம் செய்து,புதிய பணியிடம்உருவாக்கப்பட்டுள்ள
தாக கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி