மாணவர்களுக்கான இலவச திட்டங்கள் மார்ச்சுக்குள் முடிக்க கல்வித்துறை தீவிரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2012

மாணவர்களுக்கான இலவச திட்டங்கள் மார்ச்சுக்குள் முடிக்க கல்வித்துறை தீவிரம்

நிலுவையில் உள்ள மாணவ,மாணவியருக்கான இலவச
திட்டங்களை, மார்ச் மாதத்திற்குள் முடிப்பதற்கு,
கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.கலர் பென்சில், கிரையான் பென்சில் மற்றும் கணித
உபகரணபெட்டி திட்டங்களை,விரைவில் முதல்வர்
ஜெயலலிதா துவக்கி வைப்பார் என,கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியருக்கு, 14
வகையான இலவச திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்துகிறது.இவற்றில், இலவச பாடப்
புத்தகங்கள், சைக்கிள், பஸ் பாஸ் உள்ளிட்ட சில
திட்டங்கள் பழையவை.நோட்டுகள், "அட்லஸ்' ,
கலர் பென்சில், கிரையான் பென்சில், புத்தகப் பை,
லேப்-டாப், ஊக்கத்தொகை,கணித உபகரணப்பெட்டி,
காலணி ஆகியவை,புதிய திட்டங்கள்.புதிய திட்டங்களில்,நோட்டுகள், லேப்-டாப்,ஊக்கத்தொகை திட்டங்கள் துவங்கப்பட்டு,தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, 92.28 லட்சம் மாணவ, மாணவியருக்கு,
புத்தகப் பை வழங்கும் திட்டம், 1 முதல், 10ம் வகுப்பு வரை, 81 லட்சம் மாணவ, மாணவியருக்கு, காலணிகள் வழங்கும் திட்டம், 1 முதல், 5ம் வகுப்பு வரையிலான, 35
லட்சம் பேருக்கு, கலர் பென்சில்கள் வழங்கும் திட்டம் ஆகியவை,தொடக்க கல்வித்துறை சார்பில்
செயல்படுத்தப்படுகின்றன. புதிய திட்டங்கள்
செயல்பாடு குறித்து,தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "இந்த முன்று திட்டங்களுக்கும், டெண்டர் விடப்பட்டு,பொருட்கள்
தயாராகி வருகின்றன.மிக விரைவில்,வினியோகம் துவங்கும்'என, தெரிவித்தன. இதேபோல், 6 முதல் 10ம்
வகுப்பு வரை பயிலும்,46 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 16.11 கோடி ரூபாய் செலவில்,கணித
உபகரணப்பெட்டி வழங்கும் திட்டத்தை துவக்குவதற்கான ஏற்பாடுகளை, பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது.இத்திட்டமும் தயார் நிலையில் இருப்பதாக,துறை வட்டாரங்கள் தெரிவித்தன. புத்தகப்
பை, பென்சில் மற்றும் கணித உபகரணப்பெட்டி திட்டங்களை,முதல்வர் ஜெயலலிதா,விரைவில்
துவக்கி வைப்பார் என,எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான, 46 லட்சம் மாணவ,மாணவியருக்கு, அட்லஸ் வழங்கும் திட்டம் துவக்கப்படும் எனவும்,
இத்திட்டம், 23 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட இருப்பதாகவும்,துறை வட்டாரங்கள்
தெரிவித்தன. இத்திட்டம்,பாடநூல் கழகம் சார்பில்,
செயல்படுத்தப்படுகிறது.புதிய திட்டங்கள் செயல்பாடு குறித்து,பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா கூறியதாவது:
விலையில்லா திட்டங்கள் அனைத்தையும்,மார்ச்சுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.மாணவ, மாணவியருக்கான,மூன்று ஜோடி சீருடைகள்,
ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. நான்காவது ஜோடி சீருடைகளும்,மிக விரைவில் வழங்கப்படும்.
கல்வியாண்டு முடிவதற்குள்,நான்கு ஜோடி சீருடைகள்,
வேறு எந்த மாநிலத்திலும் வழங்கவில்லை.தமிழகத்தில் தான்,இத்திட்டம்செயல்படுத்தப்படுகிறது.அடுத்த கல்வியாண்டில்,பள்ளிகள் துவங்கியதும்,அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் வழங்க,
இப்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, சபிதா கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி