கால்நடை மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் வழங்கும் தேதி ஓரிருநாளில் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2013

கால்நடை மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் வழங்கும் தேதி ஓரிருநாளில் அறிவிப்பு.

கால்நடை மருத்துவக் கல்லூரியில், நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி, ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்" என, பல்கலை துணை வேந்தர் பிரபாகரன் தெரிவித்தார்.நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், உலக கால்நடை தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்குபின், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை துணைவேந்தர் பிரபாகரன்நிருபர்களிடம் கூறியதாவது:ஆண்டு தோறும் ஏப்ரல் இறுதி வாரத்தில், உலக கால்நடை தினவிழா கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டும் அரசு, தனியார் அமைப்பினர் ஒருங்கிணைந்து கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டுஅனைத்து கால்நடைகளுக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்பட்டது.நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இரண்டு ஆராய்ச்சி கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக கிராமப்புற மக்கள் வசதி பெறும் வகையில், அருசு பல்வேறு நலத்திட்டம், மேம்பாட்டு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.விலையில்லா கறவைமாடு, வெள்ளாடு வழங்கும் திட்டத்தில், கால்நடை மருத்துவர்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. புதிதாக துவங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை, ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.ஆண்டு தோறும் கல்லூரியை அங்கீகாரத்தை புதுப்பிக்க குழுவிடம் இருந்து ஒப்புதல் பெறவேண்டும்.அதை தொடர்ந்து வகுப்பு துவக்க வேண்டும். ஆனால், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அதற்கான விண்ணப்பம் வழங்கும் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.இந்தியாவில் முதன் முறையாக, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலையில், தொலைதூரக் கல்வியில் முதுகலை பட்டயப்படிப்பில், 11 பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும், 13 பாடப்பிரிவுகள் துவங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி