பிகார் பள்ளியில் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட மதிய உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்ததாக தடய அறிவியில் துறை அறிக்கை அளித்துள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2013

பிகார் பள்ளியில் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட மதிய உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்ததாக தடய அறிவியில் துறை அறிக்கை அளித்துள்ளது.

பிகார் மாநிலம், சரண் மாவட்டம் சாப்ராவில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த மதிய உணவு சாப்பிட் 23 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும்24 குழந்தைகளும், சமையலர் மஞ்சு தேவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உணவில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்த தடய அறிவியல் துறை வல்லுநர்கள், தங்களின் அறிக்கையை சனிக்கிழமை அளித்தனர்.இந்த அறிக்கை குறித்து கூடுதல் டிஜிபி ரவீந்தர் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உணவைச் சமைக்கப் பயன்படுத்தப்பட்டிருந்த எண்ணெயில் மோனோகுரோடபாஸ் மருந்து கலந்துள்ளது. அதே மருந்து குழந்தைகளின் தட்டில் இருந்த உணவிலும் கிடந்தது.விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் மோனோகுரோடபாஸ், பூச்சிக்கொல்லி மருந்தாகும். இது மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்றார்.

நன்றி
        தினமணி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி