இந்தாண்டு கோடை வெயில் அதிகமாக இருக்கும்: வானியலாளர்கள் கருத்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2014

இந்தாண்டு கோடை வெயில் அதிகமாக இருக்கும்: வானியலாளர்கள் கருத்து.


பகல் நேரம் அதிகரிப்பாலும், மழை பெய்யாததாலும், இந்தாண்டு கோடை வெப்பம், கடுமையாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த ஆண்டில் வடகிழக்கு, தென் மேற்கு பருவ மழைகள் பொய்த்தன; இந்தாண்டும், இதே நிகழ்வு தான் பதிவாகியுள்ளது. இதன் விளைவு, நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது.வானியலாளர்கள் கணிப்பு : இந்நிலையில், கடந்தாண்டை விட இந்தாண்டு, கோடை வெப்பம் சுட்டெரிக்க வாய்ப்புள்ளதாக, வானியலாளர்கள் கணித்துள்ளனர். இரவு மற்றும் பகல் நேரம் குறித்த ஆய்வில், இது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. சூரியனின் வட்டப்பாதையில், தமிழகத்தின் மீது சூரியன் வரும் போது,உச்சபட்ச வெப்பநிலை பதிவாகும். அப்போது தான், "கத்தரி' வெயில், அதாவது அக்னி நட்சத்திர காலம் வருகிறது. இம்முறை, "கத்தரி' வெயில் காலம், மே 4ம் தேதி முதல், 28ம் தேதி வரை இருக்கும். இதில், உச்சபட்ச வெப்ப காலம், மே 13ம் தேதி வருகிறது. தமிழகத்தில் தற்போது, அதிகாலையில் பனிமூட்டமும், பகல், 12:00 மணிக்கு சுட்டெரிக்கும் வெயிலும் நிலவி வருகிறது. தொடர்ந்து, நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது. இன்னும் சில தினங்களுக்கு, அதிகபட்சமாக, 35 டிகிரி, குறைந்தபட்சம், 25 டிகிரிசெல்சியஸ் வெப்பம் பதிவாகும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டை விட...:

வெப்பநிலை அதிகரிப்பு குறித்து, தமிழ்நாடு வானியலாளர் கழகத்தின் தலைவர், விஜயகுமார் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக மழை அளவு குறைந்துள்ளது. வெப்பநிலை தொடர்ந்து சீராக அதிகரித்து வருகிறது. காற்றில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படுவதால், இனி வரும் காலங்களில், காற்றும் அனலாக தான் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் சூரியன் உதிக்கும் நேரம் மற்றும் அஸ்தமிக்கும் நேரத்தில்மாற்றம் ஏற்பட்டு, பகல் பொழுது அதிகரிக்கிறது. இதன் காரணமாக, கடந்தாண்டை விட, வெயில்இந்தாண்டு அதிகமாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி