உரிய அனுமதி பெறாமல் கல்விச்சுற்றுலா - ஆசிரியை 'சஸ்பெண்ட்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2014

உரிய அனுமதி பெறாமல் கல்விச்சுற்றுலா - ஆசிரியை 'சஸ்பெண்ட்'


உரிய அனுமதி பெறாமல் கல்விச்சுற்றுலா அழைத்துச் சென்றதாக கூறி, தலைமையாசிரியை மற்றும் உதவி ஆசிரியை மதுரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் 'சஸ்பெண்ட்' செய்தார்.

மதுரை: மதுரை மாவட்டம், மேலுார் அருகே கீரனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளித் தலைமையாசிரியை மற்றும் உதவி ஆசிரியை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

இப்பள்ளி மாணவர்களை இவர்கள், சில நாட்களுக்கு முன் உரிய அனுமதியின்றி திருச்சிக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் சென்றனர். அப்போது நடந்த விபத்து ஒன்றில், மாணவர் ஒருவர் இறந்தார். 12 பேர் காயமுற்றனர். இச்சம்பவம் தொடர்பாக, உரிய அனுமதி பெறாமல் அழைத்துச் சென்றதாக கூறி, தலைமையாசிரியை பாரதிமலர், உதவி ஆசிரியை செந்தில்ராணியை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சுப்பிரமணியன் 'சஸ்பெண்ட்' செய்தார். சங்கங்கள் அதிருப்தி: 'மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல, கல்வி அதிகாரி ஒருவர் வாய்மொழி உத்தரவு வழங்கியுள்ளார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

1 comment:

  1. அவசரம் ரொம்ப அவசரம் ப்ளீஸ் 2013 CV முடித்த நாம் தொடர்பு கொள்ளும் சில வலை தலைகளின் சேவை என்று முடியும் என்று தெரியாது காரணம் தேர்தல் நேரம் மட்டும் அதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது அதனால் தயவு செய்து அனைத்து ஆசிரிய பெருமக்களும் FACEBOOK அக்கௌன்ட் இ தொடங்கவும்

    நான் முதலில் தொடங்குகிறேன்

    என்னுடைய அக்கௌன்ட் ID-
    ANGEL THOMAS TET

    வலைதலைகளின் சேவை நின்றாலும் நாம் தொடர்பில் இருப்போம் தகவல்களை பரிமாறிக்கொள்வோம்

    give me friends request

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி