விஏஓ தேர்வுக்கு வயது வரம்பை தளர்த்த கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2014

விஏஓ தேர்வுக்கு வயது வரம்பை தளர்த்த கோரிக்கை.


விஏஓ தேர்விற்கு நிர்ணயிக்கப்பட்ட வயதுவரம்பைத் தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில்
வருவாய்த்துறையில் காலியாக உள்ள 2,342 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு 1.7.74க்குப் பின்பும், 1.7.93க்கு முன்பும்பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற குரூப்4 தேர்விற்கு பிளஸ்2 மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி உள்ளவர்கள் 57 வயது வரை உள்ளவர்கள்தேர்வு எழுதினர். ஒரே கல்வித்தகுதி கொண்ட தேர்வுகளில் வயது வரம்பை வேறுபாடாக தேர்வாணையம் நிர்ணயித்துள்ளது.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விஏஓ தேர்விற்கு 40வயது என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 3, 4 ஆண்டுகளாகத்தான் அதிகளவில் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எழுதி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதையநிர்ணய வயது வரம்பால் ஏராளமானோர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். கடந்த 3 முறை விஏஓ தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் குரூப்2, குரூப்1 பணிகளுக்குச் சென்று விட்டனர். இதனால் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப 7வது, 8வது என்று பலகட்ட கலந்தாய்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே குரூப்4 தேர்வைப் போல விஏஓ தேர்விற்கும்வயது வரம்பைத் தளர்த்த வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 comment:

  1. இந்தியாவின் பிருத்வி 2 ஏவுகணைச் சோதனை வெற்றி....

    அணு ஆயுதத்தை தாங்கி செல்லும் பிருத்வி 2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.ஒடிசாவில் உள்ள பாலாசூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சந்திப்பூர் ஏவுகணை சோதனை மையத்தில் இன்று காலை 9.44 மணிக்கு பிருத்வி 2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை தரையில் இருந்து தரை இலக்கை தாக்க கூடியது. அணு ஆயுதத்தையும் தாங்கி சுமார் 350 கிமீ தூரம் தாண்டி சென்று இலக்கை தாக்கும் திறனுடையது.

    ஏற்கனவே பிருத்வி 2 ஏவுகணை கடந்த ஆண்டு டிசம்பர் 3 மற்றும் கடந்த ஜனவரி 7ம் தேதிகளில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. பிருத்வி ஏவுகணை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டை தாங்கி சுமார் 43 கிமீ உயரம் வரை பறந்து சென்று 8 நிமிடங்களில் இலக்கை தாக்கும் திறனுடையது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி