தலைமைச் செயலகம் உள்படஅரசு துறை அலுவலகங்களில் ஃபேஸ்புக், டிவிட்டருக்கு தடை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2014

தலைமைச் செயலகம் உள்படஅரசு துறை அலுவலகங்களில் ஃபேஸ்புக், டிவிட்டருக்கு தடை.


தலைமைச் செயலகம் உள்பட அரசுத் துறை அலுவலகங்களில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றசமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.அரசுத் துறைகளின் தலைமை அலுவலகங்கள், ஆணையர் அலுவலங்கள்ஆகியன தலைமைச் செயலகம், சென்னை சேப்பாக்கம் எழிலகம் ஆகியவற்றில் இயங்கி வருகின்றன.

இந்த அலுவலகங்களில் கம்ப்யூட்டர்களுடன் இணையதள வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.இந்த இணையதள வசதியைப் பயன்படுத்தி, அரசுத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சமூக ஊடகங்களை அலுவலக நேரங்களில் பார்க்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அரசுத் துறைகளின் அனைத்து கம்ப்யூட்டர்களிலும், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களைப் பார்க்க முடியாதபடி அவற்றை தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளதுதேர்தல் ஆணையம்.

இதுகுறித்து, தேர்தல் துறை அதிகாரிகள் கூறுகையில், அரசுத் துறைகளில் உள்ளவர்களில் பலரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சமூக ஊடகங்களில் அவர்கள் கருத்துகளைத் தெரிவிப்பதும், பதிவு செய்வதும், தேர்தல் பணியின் போது அவர்களது நடுநிலையை பாதிக்கச் செய்யும். எனவே, அலுவலக நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியாதபடி அவை தடை செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி