வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி: ஆசிரியர்களுக்கு, நான்கு ஆண்டுகளாக மதிப்பூதியம் கிடைக்காததால் ஏமாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2014

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி: ஆசிரியர்களுக்கு, நான்கு ஆண்டுகளாக மதிப்பூதியம் கிடைக்காததால் ஏமாற்றம்.


மதுரை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு, நான்கு ஆண்டுகளாக மதிப்பூதியம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் மற்றும் ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் போன்ற பணிகளில், ஓர் ஆண்டில், குறைந்தது ஒரு குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு, 45 நாட்கள் வரை பணிகள் ஒதுக்கப்படுகின்றன. ஞாயிறு விடுமுறையிலும் இவர்கள் பணியாற்ற வேண்டும். இதற்காக,தேர்தல் கமிஷனால் 'மதிப்பூதியம்' வழங்கப்படும்.

மதுரை மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளாக இவ்வூதியம் வழங்கப்படவில்லை. இந்தாண்டு ஜூனில்தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், வேலைநாட்களை சரிக்கட்ட பெரும்பாலும் சனிக்கிழமைகளில் பள்ளி நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, நாடுமுழுவதும் மார்ச் 9ல் சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அதிலும், ஆசிரியர்கள் பெரும் எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.ஆனாலும், எவ்வித பயனும் இல்லை.ஆசிரியர் சங்கங்கள் கூறுகையில், "தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் பணிகளை ஆசிரியர்கள் எந்த நேரத்திலும் மேற்கொள்ள தயாராக உள்ளனர். பிற மாவட்டங்களில் இதற்கான 'மதிப்பூதியம்' வழங்கப்படுகிறது. ஆனால், மதுரையில் மட்டும் நான்கு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. விடுமுறை நாளில் செய்யும் பணிக்கு, 'ஈடுசெய் விடுப்பாவது' வழங்க வேண்டும்," என்றன.

2 comments:

  1. மதுரை மட்டும் இல்லை அனைத்து மாவட்டத்திலும் தான் நான்கு ஆண்டுகளாக இவ்வூதியம் வழங்கப்படவில்லை. மதிப்பூதியம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர் ேவலுா் மாவட்டத்திலும்தான்

    ReplyDelete
  2. மதுரை மட்டும் இல்லை அனைத்து மாவட்டத்திலும் தான் மதிப்பூதியம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். vellore மாவட்டத்திலும் நான்கு ஆண்டுகளாக இவ்வூதியம் வழங்கப்படவில்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி